கர கர தொண்டைக்கு இதமான 5 ட்ரிங்க்ஸ்

மருத்துவ குணம் கொண்ட இந்த மஞ்சள் பால், உங்கள் கர கர தொண்டைக்கு மிக இதமாக இருக்கும்

   |  Updated: August 24, 2018 22:16 IST

Reddit
5 Best Drinks To Soothe Your Sore And Scratchy Throat

1. மஞ்சள் பால்

மருத்துவ குணம் கொண்ட இந்த மஞ்சள் பால், உங்கள் கர கர தொண்டைக்கு மிக இதமாக இருக்கும். சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து அருந்தினால் கரகரப்பு உடனே குறையும்.

turmeric

2.இஞ்சி-இலவங்கப்பட்டை-லைகோரிஸ் டீ

டாக்டர் வசந்த் லாட் எழுதிய 'கம்ப்ளீட் புக் அப் ஆயுர்வேதிக் ரெமிடி' புத்தகம் இந்த இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் லிகோரிஸ் தேநீர், தொண்டை வலி யை தீர்க்கும் என்று பரிந்துரைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இரண்டு பகுதி இஞ்சி, இரண்டு பாகம் இலவங்கப்பட்டை மற்றும் மூன்று பாகம் லிகோரிஸ் அல்லது அதிமதுரம் எடுத்துக் கொள்ள வேண்டும். மூலிகை கலவையை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.

3.இஞ்சி டீ

இஞ்சி தொண்டை வலியை நிவர்த்தி செய்ய உதவும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டுள்ளது. உங்களுடைய வழக்கமான தேநீரில் தேயிலை கூட இஞ்சி சேர்க்கலாம். நன்றாக இன்னும் கொதிக்கும் நீரில் துண்டாக்கப்பட்ட இஞ்சி சேர்த்து கொதிக்கவைத்து சிறிது தேன் சேர்த்து அருந்தலாம்.

ginger tea 625

4. புதினா தேயிலை

புதினா தேயிலையில் இருக்கும் ஆன்டி இன்ப்பளமடோரி கலவைகள் தொண்டைக்கு மிகவும் இதமாக இருக்கும் என்று அறியப்படுகிறது. சுமார் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில் பிரெஷ் புதினா இலைகளை சேர்த்து, கொதிக்கவைக்கவும். இந்த தேநீர் உங்கள் தொண்டை வலியைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடலையும் ஆரோக்கியமடைய செய்யும்.

5. கெமோமில் தேயிலை

கெமோமில் தேநீர் நீண்ட காலமாக மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது; இது நிம்மதியாக தூக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் இரவுகளில் கடுமையான இருமல் வராமல் தவிர்க்க நீங்கள் நம்பமுடியாத அதிசயத்தை செய்யும் என்று நம்பப்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு உதவும், மேலும் வலியை குறைக்கும். நன்கு நிவாரணம் பெற சில தினங்களுக்கு குறைந்தது இரண்டு முறை கெமோமில் டீ குடிக்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

chamomile teaஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement