வீட்டிலேயே செய்யக்கூடிய க்ரான்பெர்ரி ரெசிபீஸ்!!

க்ரான்பெர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் உடலில் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 08, 2019 16:10 IST

Reddit
5 Best Cranberry Recipes To Try At Home

க்ரான்பெர்ரியில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  க்ரான்பெர்ரி ஜூஸ் குடித்தால் சிறுநீரக தாரை தொற்று, செரிமான கோளாறு, மெனோபாஸ் போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.  க்ரான்பெர்ரியில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடண்ட், ஃபைட்டோநியூட்ரியண்ட், நார்ச்சத்து போன்றவை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.  க்ரான்பெர்ரியில் இருக்கக்கூடிய மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.  

ஆண்டிஆக்ஸிடண்ட்: 
க்ரான்பெர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் உடலில் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.  ஸ்ட்ராபெர்ரி, கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் செர்ரி ஆகியவற்றை விட அதிகமான ஆண்டிஆக்ஸிடண்ட் க்ரான்பெர்ரியில் இருக்கிறது.  

உடல் எடை: 
க்ரான்பெர்ரியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  க்ரான்பெர்ரி சாறு குடிப்பதால் உடலில் கொழுப்பு சத்து குறைகிறது.  

சிறுநீரக தாரை தொற்று: 
க்ரான்பெர்ரியில் ப்ரோந்தோசையானிடின் இருப்பதால் சிறுநீரக பாதையில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.  மேலும் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.  

இருதய ஆரோக்கியம்: 
க்ரான்பெர்ரியில் பாலிஃபினால் இருப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தை போக்குகிறது.  க்ரான்பெர்ரியை கொண்டு ஆரோக்கியமான ரெசிபிகளை எப்படி செய்வதென்று பார்ப்போம்.  

க்ரான்பெர்ரி கா பானா: 
க்ரான்பெர்ரி, புதினா, சியா விதை மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த க்ரான்பெர்ரி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.  
 

Comments

0i6o0e1o பாதாம் மற்றும் க்ரான்பெர்ரி போஹா: 
பாதாம், தேங்காய், க்ரான்பெர்ரி, மிளகாய், மசாலா பொருட்கள், அவல், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவை சேர்த்து தயார் செய்யப்படும் போஹா சிறந்த காலை உணவாக இருக்கும்.  இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  
hrc1tic
 க்ரான்பெர்ரி ஸ்மூத்தி: 
ட்ரைடு க்ரான்பெர்ரி, வாழைப்பழம், கஸ்டர்டு ஆப்பிள், ரெட் ஆப்பிள், பட்டை, தேங்காய் பால், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தியை வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.  ஒரு நாளை சிறப்பாக துவங்க இந்த ஸ்மூத்தியை குடிக்கலாம்.  
smoothie
 மெத்தி மலாய் க்ரான்பெர்ரி சிக்கன்: 
சிக்கன், மசாலா, க்ரான்பெர்ரி ப்யூரி, யோகர்ட் ஆகியவை சேர்த்து சிக்கனை தயார் செய்யலாம்.  இதனை மதிய மற்றும் இரவு உணவாக சாப்பிட அருமையாக இருக்கும்.  
3j3eg3a
 க்ரான்பெர்ரி பாதாம் ரைஸ் கீர்: 
இந்த ரைஸ் கீரில் பாதாம், க்ரான்பெர்ரி, ஏலக்காய், தேன் மற்றும் பால் சேர்த்து தயார் செய்யலாம்.  வீட்டிலேயே இதனை ருசியாக செய்து சாப்பிடலாம்.  
qdvtotn8 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement