எலுமிச்சை சாறு சேர்த்த ரெசிபிகளை சாப்பிட்டிருக்கிறீர்களா??

எலுமிச்சையில் ஹெஸ்பிரிடின் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 30, 2019 12:15 IST

Reddit
5 Best Lemon Juice Recipes | Easy Lemon Recipes

கோடை வெப்பத்தால் உடலில் சூடு அதிகரித்துவிடும்.  இதனை சரிசெய்ய உடல் சுட்டை தணிக்கக்கூடிய பழங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்.  வெப்பத்தின் காரணமாக உடலில் வயிறு சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும்.  எலுமிச்சையில் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது.  எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்டு செய்யப்படும் சில ரெசிபிகளை பார்ப்போம்.  இந்த உணவில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.

1. இருதய ஆரோக்கியம்:

  எலுமிச்சையில் ஹெஸ்பிரிடின் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.  எலுமிச்சையில் பெக்டின் மற்றும் லிமோனாய்ட் இருப்பதால் அதிரோஸ்க்ளீரோஸிஸ் அளவை குறைக்கிறது.  இவை அதிகமாக இருந்தால் தமணிகள் கடினமாகும். 2. உடல் எடை:

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சில சொட்டுகள் சேர்த்து கலந்து காலையில் குடித்து வரலாம்.  இது உடலில் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும்.3. சிறுநீரக கற்கள்:

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்ற உதவும்.  எலுமிச்சை சாறு குடிப்பதால் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கும்.4. சரும ஆரோக்கியம்:

எலுமிச்சையில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-ஏஜிங் தன்மை இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.  சருமத்தை ஃப்ரஷாகவும், இளமை தோற்றத்துடனும் வைத்திருக்கும். 5. நோய் எதிர்ப்பு சக்தி:

எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து , DNA சேதாரத்தை குறைக்கிறது.  மேலும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. 

எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் சில ரெசிபிகளை பார்ப்போம். 

மின்ட் கிவி லெமனேட்:

எலுமிச்சை மற்றும் கிவி பழத்தின் விழுது, புதினா ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த பானத்தை வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதெல்லாம் குடிக்கலாம்.  எலுமிச்சை சாறு மற்றும் புதினா உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.  தினமும் காலை இதனை குடித்து நாளை துவங்கலாம்.

ianfkmv8

 

லெமன் க்ரீம் ப்ரூலி:

ஞாயிற்று கிழமைகளில் வித்தியாசமான டெசர்ட் ரெசிபிகளை வீட்டிலேயே ட்ரை செய்யலாம்.  எலுமிச்சை சாறு, தேன், க்ரீம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டெசர்டுடன் கப் கேக் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.  இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிக்கது. brulee
 

பஞ்சாபி லெமன் சிக்கன்:

ஆரஞ்சு சாறு, கரும்பு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபி புளிப்பு சுவை மிக்கதாக ருசியாக இருக்கும்.  இந்த பஞ்சாபி ஸ்டைல் ரெசிபி எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும். ep02701o
 

எலுமிச்சை சாதம்:

கடுகு, மிளகாய் தூள், கறிவேப்பிலை, கடலை, உளுந்து, கொண்டைக்கடலை, எலுமிச்சை சாறு மற்றும் சாதம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை தயாரிப்பது மிகவும் எளிமையானது. 

lemon rice
 

லெமன் புட்டிங்:

எலுமிச்சை சாறு, முட்டை, வெண்ணெய், சர்க்கரை, உப்பு, பட்டை தூள் மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் இந்த டெசர்ட் ரெசிபி கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.  இந்த புட்டிங்கை டின்னருக்கு சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும்.

Commentslemon pudding

 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement