முடி உதிர்வதைத் தடுக்க உதவும் ஊட்டச்சத்து மிகுந்த 5 உணவுகள்!

பயோட்டீன், புரோட்டீன் நிறைந்த உணவுகள் முடி உதிர்வைத் தடுக்கின்றன.

  |  Updated: August 20, 2020 15:45 IST

Reddit
Healthy Hair Diet: 5 Biotin-Rich Foods For Hair Fall And Hair Growth

இயற்கையான உணவுகள் மூலமாகவே முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்

Highlights
  • Many people struggle with hair fall and hair loss.
  • Enrich your diet with healthy foods for hair growth.
  • Biotin For Hair: Here are 5 biotin-rich foods for your hair diet.

பொதுவாக முடி உதிர்வதற்கு பல்வேறு காரணிகள் உள்ளனர். உணவு முறை, குளிக்கும் தண்ணீர், பழக்கவழக்கங்கள், அதிகமாக சிந்தித்தல், பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அதற்கான சரியான காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்ய வேண்டும். இருப்பினும் சில பொதுவான உணவு பழக்கங்களை மேற்கொண்டால், முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

1. பால் பொருட்கள்

பால், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட அனைத்துப் பால்பொருட்களிலும் அதிகளவு பயோட்டின் காணப்படுகிறது. இந்த உணவுகள் அன்றாடம் எடுத்துக் கொண்டால் முடி வளரும்.

Newsbeep
h02cbn6

பால் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

2. கீரை வகைகள்

கீரையில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. மேலும், பயோட்டீனும் நிறைந்துள்ளது. பால்க் பன்னீர், பருப்பு பாலக் போன்ற கீரை ரெசிபிகளை சாப்பிட்டால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 

3. முட்டை கரு

நீங்கள் முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுபவரா? இனி அப்படி இருக்காதீர்கள். ஏனெனில், முட்டையின் மஞ்சள் கருவில் 10 mcg அளவு பயோட்டின் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முட்டையில் உள்ள புரோட்டீனும் முடி வளர்வதற்கு காரணமாகிறது.

4. நட்ஸ் அண்ட் சீட்ஸ்

நட்ஸ், சீட்ஸ், உலர் பழங்கள் போன்றவைகளை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம். இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகள் உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே நேரத்தில் முடி உதிர்வு உள்ளவர்களும் சாப்பிடலாம். சாலட், ஸ்மூத்திகள் போன்றவற்றில் அதிகளவு நட்ஸ், சீட்ஸ் போட்டு சாப்பிடலாம். 

(Also Read: 7 Foods for Hair Growth You Should Be Eating Daily)

700hb5mg

Nuts and seeds are rich source of B vitamins.
 

Listen to the latest songs, only on JioSaavn.com

5. சால்மன்

சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும், பயோட்டீனும் காணப்படுகின்றன. இது கூந்தல் நீளமாக வளரச் செய்வதற்கும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. 3 அவுன்ஸ் சாலமனில் 5 mcg பயோட்டீன் இருப்பதாக கூறப்படுகிறது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement