இந்த மழைக்காலத்தில் கேரட் கொண்டு டெசர்ட் செய்யலாமே!!

அமெரிக்காவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் கேரட் கேக்கும் ஒன்று.  மாலை நேரத்தில் சூடான தேநீருடன் இந்த கேரட் கேக்கை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  

   |  Updated: September 16, 2019 15:25 IST

Reddit
5 Delicious Carrot Desserts You Must Try This Winter
Highlights
  • மழைக்காலத்தில் கேரட் அதிகபடியாக கிடைக்கும்.
  • கேரட் கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபிகள் சுவையானதாக இருக்கும்.
  • கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கும்.

மழைக்காலம் என்றாலே நாவிற்கு சுவையான ரெசிபிகளை செய்து சாப்பிடுவதே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.  கேரட்டில் பீட்டா கெரட்டின், வைட்டமின் ஏ இருக்கிறது.  இதனால் பற்கள், கண்பார்வை, சருமம் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் அல்கலைன் இருப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்.  தொடர்ச்சியாக கேரட் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் யூரிக் அமிலத்தை குறைத்து நச்சுக்களை வெளியேற்றும்.   கேரட் கொண்டு பல ரெசிபிகளை செய்யலாம்.  ஜூஸ், சாலட், அல்வா போன்ற இனிப்புகளை செய்யலாம்.  carrot juice 

1. கேரட் பாயாசம்: 
ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் கேரட்டின் நற்குணங்களும், ருசியும் அடங்கிய இந்த கேரட் பாயாசத்தை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  இந்த பாயாசம் எல்லோருக்கும் பிடித்த சுவையில் இருக்கும்.   
carrot soup 

2. பஜ்ரா கேரட் கேக்: 
கம்பு, கேரட் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கேரட் கேக்கில் கிரீம் சீஸ் கொண்டு ஃப்ராஸ்டிங் செய்ய வேண்டும்.  இது உங்கள் நாவின் சுவை அரும்புகளை தூண்டச் செய்யும்.  இதில் ஆரோக்கியம் அதிகமாக இருக்கிறது.  நீங்கள் விருப்பப்பட்டால் ஆரோக்கியமான பொருட்கள் சிலவற்றை சேர்த்து கொள்ளலாம்.   
 

Newsbeep
carrot cake
 


3. ஆப்பிள் கேரட் மஃபின்: 
ஆப்பிள் மற்றும் கேரட்டின் நற்குணங்கள் நிறைந்த இந்த மஃபின் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.  வெறும் முப்பதே நிமிடங்களில் இதனை செய்து சாப்பிடலாம்.  அதன் மேல் சீஸ் கொண்டு ஃப்ராஸ்ட் செய்யலாம்.  அல்லது உலர்ந்த திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.commuffin 

4. கேரட் திராட்சை குக்கீ: 
கேரட், வெதுவெதுப்பான பால், உலர் திராட்சை, அமராந்த் மாவு ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த குக்கீ தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானது.  சில நிமிடங்களிலே இந்த குக்கியை தயாரித்து விடலாம்.  
raisins cookies
 

5. அமெரிக்கன் கேரட் கேக்: 
அமெரிக்காவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் கேரட் கேக்கும் ஒன்று.  மாலை நேரத்தில் சூடான தேநீருடன் இந்த கேரட் கேக்கை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த கேக் ரெசிபியை வீட்டிலேயே கூட செய்யலாம்.  
 

Comments

carrot
 


(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement