உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய 5 விஷயங்களை

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 14, 2018 18:56 IST

Reddit
Weight Loss: 5 Common Mistakes That Could Be Preventing You From Losing Weight 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உங்கள் வாழ்வியல் முறையை ஒழுங்குப்படுத்த வேண்டும். அதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சாலட்
கடைகளில் கிடைக்கக்கூடிய சாலட்களை வாங்கி சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் குறையாது. ஏனென்றால் அதில் மையோனீஸ் மற்றும் ஒயிட் சாஸ் சேர்க்கப்பட்டிருக்கும். அவை உடல் எடையை அதிகரிக்கக்கூடும். வினிகர், க்ரீக் யோகர்ட், ஆலிவ் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சாலட்களே சிறந்தது. மேலும் சாலட்டில் சீஸ் மற்றும் பெகான் சேர்க்காமல் சாப்பிடுங்கள்.

சூப்
க்ரீமி சூப்களை தவிர்த்து க்ளியர் சூப் சாப்பிடலாம். அவற்றில் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அதனால் க்ரீமி சூப்களை தவிர்த்திடுங்கள்.

அளவில் சிறிய தட்டுகளை பயன்படுத்துங்கள்
நீங்கள் பயன்படுத்தும் தட்டின் அளவு பெரியதாக இருக்கும்போது அதில் இருக்கக்கூடிய உணவு குறைவாகத்தான் தெரியும். அதனால் நிறைய சாப்பிடுவீர்கள் என்பதால் அளவில் சிறிய தட்டையே பயன்படுத்துங்கள்.

சர்க்கரை
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவை தவிர்ப்பது அவசியம். கெட்சப், செரல், குக்கீஸ் போன்றவற்றில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதனால் உடல் எடை குறைக்க இவற்றை சாப்பிடுவதில் பயனில்லை. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரை உடல் எடையை தான் அதிகரிக்கும்.

சமையலில் கவனம் செலுத்துங்கள்
சமைக்கும் போது ருசியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆரோக்கியத்தை மறந்துவிடுவோம். உதாரணமாக நிறைய எண்ணெய், காரம், உப்பு மற்றும் புளிப்பு ஆகியவற்றை அதிகபடியாக உணவில் சேர்த்து கொண்டிருப்போம். இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் கவனமாக சமைக்க வேண்டும்.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com