வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய 5 காய்கறிகள்!

வீட்டுத் தோட்டம் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த வீட்டின் அழகையும் மேம்படுத்துகிறது.

NDTV Food  |  Updated: May 20, 2020 18:41 IST

Reddit
5 Common Vegetables You Can Easily Grow In Your Home Garden

நீங்கள் சமையலறை தோட்டத்தை உருவாக்க நினைத்தால், முதலில் இந்த காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள்.

Highlights
  • வீட்டில் ஆர்கானிக் உணவை வளர்க்க வேண்டுமா?
  • உங்கள் சொந்த சிறிய சமையலறை தோட்டத்தைத் தொடங்கவும்
  • வீட்டில் வளர எளிதான சில காய்கறிகள் இங்கே

வீட்டில் உள்ள பாத்திரங்கள் கொண்டு தோட்டம் அமைப்பதை விடச் சுவாரஸ்யமானது வேறெதுவும் இருக்காது. இது உங்கள் சொந்த தயாரிப்புகளை வைத்திருப்பதில் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த வீட்டின் அழகையும் மேம்படுத்துகிறது. ஒரு தோட்டத்தை வளர்ப்பதற்கு உங்கள் வீட்டில் போதுமான இடம் இல்லை என்று நீங்கள் நினைத்தால், வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு தோட்டம் அமைப்பது உங்களுக்கு ஒரு சிறந்த வழி. உங்களுக்குத் தேவையானது மண் மற்றும் ஒரு பானை அல்லது ஒரு பாத்திரம், நீங்கள் சுவரில் அல்லது ஜன்னல் கிரில்ஸில் கூட தொங்கவிடலாம். எனவே, தொட்டியில் வளர்க்க எளிதான 5 உணவுகளைப் பற்றி இங்கே பேசப்போகிறோம். 

வீட்டுத் தொட்டி அல்லது பானையில் வளர்க்கக் கூடிய 5 உணவுப் பொருட்கள் இதோ:

1. பூண்டு

இந்த மசாலா வழக்கமாகச் சமையலுக்கான தளமாகப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் சந்தையில் வாங்கும் பூண்டைப் பயன்படுத்தாமல், பூண்டு விதைகளைப் பயன்படுத்துங்கள்.

2. வெங்காயம்

இந்த சத்தான அழகுபடுத்தும் உணவை உங்கள் தோட்டத்தில் வளர்க்கலாம். நீங்கள் கடையில் வாங்கிய ஸ்காலியன்ஸ் அல்லது வெங்காயத்தின் வேர்களை ஒரு ஜாரில் வைக்க வேண்டும். ஒரு வாரம் ஒரு அங்குல தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருங்கள், பின்னர் வேர்கள் வளர்ந்து வருவதைக் காணலாம். பச்சை பகுதியை அகற்றி, தண்டை மண்ணில் நடவும். அவ்வளவு தான்!

3. முள்ளங்கி

ஒவ்வொரு இந்தியச் சமையலறையிலும் காணக்கூடிய பொதுவான உணவுகளில் முள்ளங்கி ஒன்றாகும். உங்கள் தோட்டத்தில் வளர்க்க நீங்கள் விதைகளை மண்ணின் மீது தூவ வேண்டும் மற்றும் லேசாக மறைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, முளைத்த செடிகளை 2 அங்குல இடைவெளியில் நடவும்.

4. கீரைகள்

நிறையப் பயனுள்ள கீரைகள் கொண்ட தோட்டம் வைத்திருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? நீங்களும் கீரைகள் விரும்பினால், அவற்றை வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றி, உங்கள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வெளியில்படும் இடத்தில் வைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை மண்ணில் உரம் சேர்க்க மறக்காதீர்கள்.

5. பட்டாணி

ஸ்னாப் பட்டாணி ஸ்பிரிங் காலத்தின் துவக்கத்தில் நடுவது நல்லது. அவை குளிரான காலநிலையில் செழித்து வளரும் மற்றும் ஒளி உறைபனியைத் தாங்கக்கூடியவை. அதனால், ஸ்பிரிங் காலத்தில் பட்டாணியை விதைத்துப் பயன்பெறுங்கள். 

எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இந்த உணவுப் பொருட்களை உங்கள் தோட்டத்தில் வளரச் செய்து, உங்கள் காய்கறிகளை ஃபிரெஷாக உண்டு மகிழுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com