நீரிழிவு நோயாளிகளுக்கான ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபீஸ்!!!

காலை உணவிற்கு சிறந்த இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் விரும்பி சாப்பிடுவார்கள். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 07, 2019 12:57 IST

Reddit
Diabetes Diet: 5 Delectable Vegetarian Breakfast Ideas For Diabetics
Highlights
  • இரத்த சர்க்கரையை சீராக வைக்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
  • பருப்பு மற்றும் தானிய வகைகளை அதிகம் சாப்பிடலாம்.
  • க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளை சமையலுக்கு பயன்படுத்தலாம்.

காலை உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.  காலை நேரத்தில் மெட்டபாலிசம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால் காலை உணவை எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக எடுத்து கொள்ள வேண்டும்.  காலை உணவை தவரவிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போவதுடன், உடல் ஏற்கனவே சேமித்து வைத்த சத்துக்களையும் உபயோகப்படுத்திவிடும்.  அதனால் உடல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் மெலிந்து விடக்கூடும்.   அதிலும் நீரிழிவு நோயாளியாக இருந்துவிட்டால் நிச்சயமாக  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சம அளவு சரியான நேரத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்.  ருசியாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.  அதே சமயம் உடலில் இரத்த சர்க்கரையையும் சீராக வைத்திருக்கும்படியான காலை உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது சற்றே சவாலான விஷயம் தான்.  ஆனால் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.  அப்படியான சில உணவுகளை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.  ஓட்ஸ் இட்லி: 

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது ஓட்ஸ்.  நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிப்பதற்கு தாமதமாகும் என்பதால் இரத்தத்தில் சர்க்கரை மிகவும் தாமதமாகவே வெளியேறும் என்பதால் உடலில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  வேகவைக்கப்படும் உணவு என்பதால் கலோரிகளும் குறைவு.  oats idli
 

பாசிப்பருப்பு சில்லா:

பாசிப்பருப்பு நார்ச்சத்து நிறைந்தது.  இதனை வேகவைத்து சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது.  இத்துடன் மஷ்ரூம் மற்றும் டோஃபு டாப்பிங் சேர்த்து சாப்பிட இன்னும் ருசியாக இருக்கும்.  

3f55eha 

மேத்தி பராத்தா:

வெந்தயக்கீரையில் ஆண்டிடையாபடிக் தன்மை இருக்கிறது.  மேலும் அதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது.  வெந்தயக்கீரையில் பராத்தா செய்து சாப்பிடலாம்.  காலை உணவிற்கு சிறந்த இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  சமைக்கும்போது எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்யலாம். 

methi paratha
 

முளைக்கட்டிய பயிறு:

காலை உணவாக முளைக்கட்டிய பயிறுகளை சாப்பிடலாம்.  அவற்றில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது.  புரதமும் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது.  முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் பயிறுகளுடன் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.  ராகி தோசை: 

க்ளூட்டன் ஃப்ரீ மாவு வகைகளில் ராகியும் ஒன்று.  ராகி தோசையுடன் சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.  நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த காலை உணவு இது.  Listen to the latest songs, only on JioSaavn.com

m0vdulk8

 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement