உடலை டீடாக்ஸ் செய்யும் 5 ரெசிப்பிகள்!

ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களைப் போக்குவதே டீடாக்ஸ்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 09, 2019 11:08 IST

Reddit
5 Best Detox Water Recipes | Easy Detox Recipes

தூக்கமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது இவற்றால் நம் வாழ்க்கை முறை மாறி ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இதனால், ஸ்ட்ரெஸ் அதிகமாகி நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. இதற்குத் தீர்வாக நாம் நம் உடலை டீடாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். உடலை டீடாக்ஸ் செய்வதன் மூலம் உடல் பாதிப்படைவதைத் தடுக்கலாம். டீடாக்ஸ் என்றால் என்ன? தூசி, புகை, மாசு நிறைந்த காற்று, ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களைப் போக்குவதே டீடாக்ஸ். இது சரும பாதிப்பிலிருந்து புற்றுநோய் பாதிப்பு வரை வராமல் பாதுகாக்கும். 

buttermilk with coconut water

 நம் உடல் இயற்கையாகவே கல்லீரல், சிறுநீர் மூலம் கழிவுகளை வெளியேற்றினாலும், ஏற்கெனவே கூறியது போல சுற்றுச்சூழல் காரணமாக அதிகப்படியான டாக்ஸின்கள் நம் உடலில் சேர்கிறது. இது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. டீடாக்ஸ் செய்வதால் நச்சுக்களை மட்டும் நீக்காமல் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.
cucumber and kiwi juice
 

 உங்களுக்காக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.  வீட்டிலேயே செய்யக்கூடிய 5 டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ்கள்!1. இளநீருடன் எலுமிச்சை மற்றும் புதினா (Coconut Water with Lemon and Mint)

உடனடி புத்துணர்ச்சி தரக்கூடிய இந்த டீடாக்ஸ் ட்ரிங்க்ஸை நீங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம். இளநீர் இயற்கையிலேயே தனக்குள் பல வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் உடல் டீஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த டீடாக்ஸில் தேவைப்பட்டால், புதினாவுடன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர், புதினா, தேன், எலுமிச்சை சேர்ந்து புது வித சுவையை தரும்.

lemonade
 

2. வெள்ளரி மற்றும் கிவி ஜூஸ் (Cucumber and Kiwi Juice)

பழம் மற்றும் காய்கறியின் நற்குணங்கள் நிறைந்த ட்ரிங்க்ஸ் இது. 90% சதவிகிதம் தண்ணீர் வெள்ளரியில் இருப்பதால், நீர்ச்சத்துக் குறைபாட்டைப் போக்கும். டீடாக்ஸ் ட்ரிங்க்ஸில் இது சரியான சாய்ஸ்.

lime soda
 

3. எலுமிச்சை ஜூஸ் (3 Way Nimbu Paani)

உலகில் பல குளிர்பானங்கள் இருந்தாலும் அதில் பெஸ்ட்டாக இருப்பது லெமன் ஜூஸ் மட்டும்தான்.  நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதில் புதினா மற்றும் ஸ்பைஸஸ்களை சேர்த்தால் உடலுக்கு இன்னும் நல்லது. இந்த எலுமிச்சை ஜூஸை நீங்கள் மூன்று வழிகளில்  செய்து குடிக்கலாம்.

detox haldi tea 

4. மின்ட் லைம் ஃபிஸ் ( Mint lime fizz)

இந்த ட்ரிங்ஸ் உங்கள் உடலை டீடாக்ஸ் செய்து புத்துணர்ச்சி தரும். இதில் புதினா இலையுடன், எலுமிச்சை சாறு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அதனுடன் சோடாவை ஊற்றினால் நல்ல ஃப்ளேவர் கிடைக்கும்.5. டீடாக்ஸ் ஹல்தி டீ (Detox Haldi Tea)

இது இயற்கை முறை, இந்த டீடாக்ஸ் ட்ரிங்க்ஸில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்களான மஞ்சள், இஞ்சி, மிளகுடன் தேன் இருப்பதால் உடலுக்கு மிகவும் ஏற்றது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பது நம்மில் பலருக்குத் தெரியும்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement