பாதாம் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 ஸ்நாக்ஸ்கள்!!

கடுகு, சீரகம், ஓமம், கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ளூபெர்ரீஸ் மற்றும் பாதாம் சேர்த்து வறுத்து சாப்பிடலாம். 

  |  Updated: September 21, 2019 12:29 IST

Reddit
5 Easy Almond Snacks Recipes To Prepare At Home
Highlights
  • பாதாமில் உடலுக்கு தேவையான ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் இருக்கிறது.
  • உடல் எடை குறைப்பதற்கு பாதாம் சாப்பிடலாம்.
  • ஆரோக்கியம் நிறைந்த பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிடலாம்.

மாலை நேரத்தில் ஏற்படக்கூடிய பசியை போக்க, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.  எண்ணெயில் பொரித்த உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  பசி நேரத்தில் கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.  அப்படி ஆரோக்கியம் நிறைந்த உணவுகளுள் பாதாம் முக்கியமானது.  இதில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் இருப்பதால் இருதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மேலும் இதில் புரதம் இருக்கிறது.  க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கிறதென்பதால் நீரிழிவு நோயை சீராக வைக்க உதவும். 

உடல் எடை குறைக்க பாதாம் சாப்பிடலாம்.  பாதாமில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும்.  மலச்சிக்கலை தவிர்த்து குடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.  பசி நேரத்தில் பாதாம் சாப்பிடுவதால் உடல் எடை குறைவதுடன், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.  பாதாம் கொண்டு சில ருசியான ஸ்நாக்ஸ் ரெசிபிகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். 

பேக்டு பாதாம் கோஃப்தா:

மசித்த உருளைக்கிழங்கு, பாதாம், முட்டை மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து கோஃப்தா தயாரித்து சாப்பிடலாம்.  பிரட் க்ரம்ப்ஸ் கொண்டு மொருமொருப்பாக தயாரிக்கலாம்.  நீங்கள் விரும்பும் டிப் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். rs2iidm
 

ஓட்ஸ் மற்றும் பாதாம் பிஸ்கட்:

கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் ஆகியவை சேர்த்து செய்யப்படும் மொருமொருப்பான பிஸ்கட் ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  தினமும் மாலை நேரத்தில் பசியின்போது, சூடான தேநீருடன் பாதாம் பிஸ்கட் சாப்பிடலாம்.

biscuit

பாதாம் டூலிப்:

மைதா, முட்டை, சர்க்கரை, வெண்ணெய் மற்றும் பாதாம் சேர்த்து எளிமையான ரெசிபியை செய்யலாம்.  இதனை தயாரிக்க அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே தேவைப்படும்.  வீட்டிலேயே செய்வதனால் ஆரோக்கியமாக இருக்கும். 

dqbapfm8
 

ஸ்வீட் சில்லி பாதாம்:

பாதாமை முட்டையின் வெள்ளை கரு கொண்டு தடவி மசாலா பொருட்கள் சேர்த்து வறுத்து எடுத்து சாப்பிடலாம்.  10 நிமிடத்தில் இந்த ருசியான ரெசிபியை செய்யலாம்.  இந்த ஸ்நாக்ஸை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com

nekvcq2g

பாதாம் பேர்ல்ஸ்:

கடுகு, சீரகம், ஓமம், கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ளூபெர்ரீஸ் மற்றும் பாதாம் சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.  இதில் புளிப்பு சுவை வேண்டுமென நினைத்தால் எலுமிச்சையை பிழிந்து விட்டு கொள்ளலாம்.  காலை நேரத்தில் இதனை சாப்பிட்டு வரலாம். 

Comments

go13jngg
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement