சமையல் அறையில் இருக்கும் ஹேர் ரெமிடிஸ்

தினத்தோரம் முடியை அலசுவதும் ஆபத்தானது தான், அதிக எண்ணெய் பசை கொண்ட முடிக்கான தீர்வை உங்கள் சமையல் அறையில் இருந்தே எடுக்கலாம்.

   |  Updated: June 13, 2018 11:16 IST

Reddit
5 Easy Home Remedies For Oily Hair
Highlights
  • கோடைக்கால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து நம்மை சோர்வாக்கிறது
  • அதிக வேர்வை முடியின் எண்ணெய் பசையை அதிகரிக்கிறது
  • முடியை அதிகம் அலசினால் அது முடியை சேதம் அடைய செய்யும்
வெயில் எல்லா வகையிலும்  நம்மை அதிகமாக பாதிக்கிறது, தூசி, வெயில், மாசு நம் சர்மத்தையும், உடலையும் அதிகமாக சேதப்படுத்துகிறது. எப்படி நம் சருமத்தை உடல் சூட்டையும் நாம் பாதுகாக்கிறோமோ அதேபோல் தலை முடியிலும் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக எண்ணெய் பிசுபு இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக தினத்தோரம் முடியை அலசுவதும் ஆபத்தானது தான், அதிக எண்ணெய் பசை கொண்ட முடிக்கான தீர்வை உங்கள் சமையல் அறையில் இருந்தே எடுக்கலாம்.

1. அலோ வேரா 

முடிக்கு அதிக ஊட்டச்சத்து தரக்கூடியது அலோ வேரா, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில், ஒரு தேக்கரண்டி அலோ வேரா உடன் கொஞ்சம் எலுமிச்சைசாறு சேர்த்து  பயன்படுத்தவும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வித்தியாசத்தை பாருங்கள்.
 
aloe vera


2. முல்தானி மட்டி 

முல்தானி மட்டியில் உறிஞ்சும் தன்மை அதிகமாக உள்ளது. முடியில் இருந்து அதிக எண்ணெய் பசை வெளியேறுவதால் இது நிச்சயம் நமக்கு பயன்படும். இரண்டு தேக்கரண்டி முல்தானி மட்டி உடன் தண்ணீர் சேர்த்து உச்சந்தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து அலச வேண்டும். 
 

multani mitti

3. பிளாக் டீ 

தண்ணீரில்  தேயிலை சேர்த்து கொதிக்க விட்டு வடிக்கட்டிய நீரை எடுத்துக்கொள்ளவும். அந்த தேநீரை முடியில் தேய்த்து 20 நிமடம் கழித்து அலசவும். 

black tea 620x350


4. எலுமிச்சை சாறு 

Listen to the latest songs, only on JioSaavn.com

எலுமிச்சைச்சாறில் பொதுவாக நலன்கள் அதிகமாக உள்ளது. எலுமிச்சை சாறை தண்ணீருடன் சேர்த்து 15 நிமிடம் தலையில் ஊறவைத்து அலசவும். இதுவும் தலையில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி உடலையும் குளிர்ச்சி அடைய செய்யும். 
 

lemon juice


5. முட்டை மற்றும் எலுமிச்சை சாறு 

இரண்டு முட்டை வெள்ளை கருவுடன் எலுமிச்சை சாறை சேர்த்து தலையில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். 

Commentsஇந்த அனைத்தும் எண்ணெய் பசையை எடுத்து உங்கள் முடியை பாதிக்காமல் பாதுக்காக்கும். 


 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement