ஹோலிப் பண்டிகைக்குப் பின் சருமத்தை பாதுகாக்க எளிமையான 5 டிப்ஸ்

விடப்பிடியான வண்ணங்களை உடலிருந்து அகற்றுவது எப்படி என்று கவலைப் படத் தேவையில்லை.

 , Honorary Dermatologist to President Estate Clinic, Rashtrapati Bhawan  |  Updated: March 19, 2019 11:35 IST

Reddit
5 Easy Tips to Take Care of Your Skin After Playing Holi
Highlights
  • ஹோலி விளையாட்டிற்கு பின் ஷவரில் 5-10 நிமிடங்கள் நின்று வண்ணங்களை நீக்கலாம
  • முகத்தில் உள்ள வண்ணங்களை நீக்க ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்.
  • அழுத்தமாக தேய்த்து சருமத்தை புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை வரவுள்ளது. குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை வண்ணங்களுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். நிறைய இனிப்புகளுடனும் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்கள் என  ஒரு நாள் வண்ணங்களுடன் விதவிதமான உணவுகளுடனும் கொண்டாடலாம். வண்ணப்பொடிகளினால் சிலரின் சருமம் அலர்ஜியினால் பாதிக்கக்கப்படலாம். பாரம்பரியமாக இந்த ஹோலி பண்டிகை இயற்கை வண்ணங்களைக் கொண்டு கொண்டாடுவதுதான் வழக்கம், இதற்கு பூக்கள் மற்றும் மூலிகைகள் கொண்டு வண்ணங்கள் உருவாக்கப்படும். இன்றைய காலத்தில் தரமற்ற சிந்தடிக் வண்ணங்கள், கெமிக்கல் மற்றும் செயற்கையான வெவ்வேறு டைகளைக் கொண்டு வண்ணப் பொடிகளை உருவாக்குகிறார்கள்.

Newsbeep

வண்ணப் பொடிகளில் மெட்டல், ஆசிட்ஸ், மைக்கா, கிளாஸ் பவுடர் மற்றும் ஆபத்தான அல்கைல்ஸ் போன்றவை கலக்கப்பட்டுள்ளன. இந்த வேதிப் பொருட்கள் சருமத்தை பாதிக்கலாம். இவற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழி இயற்கையான வண்ணங்களை உருவாக்குவதுதான். ரோஜா இதழ்கள், மஞ்சள், சந்தனபொடிகள் கொண்டு உருவாக்கலாம். இதனால் சருமத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை. இயற்கையான பொருட்களையே பலரும் உபயோகிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் உடல் முழுவதும் ஏதேனும் எண்ணெய்யை பூசிக் கொள்வது நல்லது.

ஆலிவ் ஆயில் அல்லது விட்டமின் இ எண்ணெய்யை தடவிக் கொள்ளலாம். மறக்காமல் எண்ணெய்யை காதின் பின்புறம் மற்றும் விரல் நுனிகள் நகத்தின் மீதும் தடவிக் கொள்வது நல்லது. தலையில் கடுகு எண்ணெய்யைத் தடவி போனி டெயில் போட்டுக் கொள்வது நல்லது. நகத்திற்கு நல்ல அடர்த்தியான நிறத்தில் நெயில் பாலிஸ் போட்டுக் கொள்வது நல்லது. ஹோலி கொண்டாட்டங்கள் முடிந்த பின் கண்ணாடியைப் பார்த்தால் உங்களையே அடையாளம் காணமுடியாமல் இருக்கும். விடப்பிடியான வண்ணங்களை உடலிருந்து அகற்றுவது எப்படி என்று கவலைப் படத் தேவையில்லை. வண்ணங்களை எப்படி நீக்கலாம் என்ற டிப்ஸை பார்க்கலாமா...

shower

1. 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஓடும் தண்ணீருக்குள் கீழ் நிற்க வேண்டும். வண்ணங்கள் போக வேண்டுமென அழுத்தி வேகமாக தேய்க்க வேண்டியதில்லை. 

2. லிக்யூட் சோப்பை உடல் முழுதும் தேய்த்துக் குளிக்கலாம். அல்லது தயிர்,சந்தனதூள் மற்றும் லெமன் சேர்த்து அதை தேய்த்துக் குளிக்கலாம்.

olive oil

3. மஞ்சள் தூள், அரிசி மாவு கலந்து தேய்த்து 15-20 நிமிடம் கழித்து கழுவினால வண்ணங்கள் போய்விடும். முகத்தில் உள்ள வண்ணங்களை நீக்கவும் உதவும். 

4. முகத்தில் உள்ள வண்ணங்களை நீக்க ஆலிவ் தேய்த்துக் கழுவலாம். சில நிமிடங்கள் எண்ணெய்யை சருமத்தில் ஊறவிட்டு பின் கழுவலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

5. சில நேரங்களில் வண்ணங்கள் நீங்க இரண்டு நாட்கள் வரை ஆகலாம். வண்ணங்களை நீக்குவதற்காக கரகரவென அழுத்தி தேய்த்து சருமத்தை புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். வெயிலில் அதிக நேரம் இருக்காமல் இருப்பது நலம்.

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.s wishing you all a colourful (and herbal) Holi 2016!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement