நீரிழிவு நோயாளிகள் பட்டையை எப்படி பயன்படுத்தலாம்?

நீரிழிவு நோயாளிகள் பட்டை தூளை தண்ணீரில் சேர்த்து குடித்து வரலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் 2 இஞ்ச் பட்டையை ஊற வைக்கவும்.  ஒரு இரவு முழுக்க ஊறிய பின் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வரலாம்.  

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 13:04 IST

Reddit
5 Effective Ways To Use Cinnamon (Dalchini) In Diabetes Diet
Highlights
  • நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி பட்டை சேர்த்த மசாலா தேநீர் குடிக்கலாம்.
  • கிரேவி, கேக் போன்றவற்றில் பட்டை தூள் சேர்க்கலாம்.
  • உடல் எடை குறைக்கவும் பட்டை தூள் உதவுகிறது.

மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டை பெரும்பாலான ரெசிபிகளில் பயன்படுத்தப்படுகிறது.  இதில் நறுமணம் மற்றும் மருத்துவ குணம் இருப்பதால் உலகம் முழுக்க இது பயன்படுகிறது.  உடல் எடை குறைக்க, நீரிழிவு நோய் மற்றும் சுவாச கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உணவில் பட்டையை சேர்த்து கொள்ளலாம்.  குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பட்டையை சேர்த்து கொள்ளலாம்.  பட்டையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.  

fnfjns6

 

 

பட்டையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வதால் கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது.  இன்சுலின் சுரப்பை தூண்டி இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவுகிறது.  இதில் ஆண்டி-டையாபடிக் தன்மை இருப்பதால் டைப்-2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.  செரிமானத்தை அதிகபடுத்தும் தன்மையும் பட்டைக்கு உண்டு.  செரிமானம் சீராக இருந்தாலே உடலில் மற்ற நோய்களின் அபாயம் ஏற்படாது.   

alrfai7

 


 

 

1. பட்டை நீர்:

நீரிழிவு நோயாளிகள் பட்டை தூளை தண்ணீரில் சேர்த்து குடித்து வரலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் 2 இஞ்ச் பட்டையை ஊற வைக்கவும்.  ஒரு இரவு முழுக்க ஊறிய பின் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வரலாம்.  

2. சர்க்கரை: 

பட்டையில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருக்கிறது.  சர்க்கரைக்கு பதிலாக சில ரெசிபிகளில் பட்டையை சேர்த்து கொள்ளலாம்.  கேக், பிஸ்கட், கீர், அல்வா மற்றும் பர்ஃபி போன்ற ரெசிபிகளில் பட்டையை சேர்த்து கொள்ளலாம். 

3. பட்டை தேநீர்: 

தேநீர் அல்லது காபியுடன் சிறிதளவு பட்டை தூள் சேர்த்து குடிக்கலாம். மசாலா தேநீரில் இவை சேர்க்கப்படுகிறது.  இதில் ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ளதால் அடிக்கடி குடித்து வரலாம். 

4. ஓட்மீல்: 

ஓட்மீலில் பட்டை தூள் சேர்த்து சமைக்கலாம்.  இதில் சர்க்கரை சேர்பதற்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம்.  செரல்ஸ், பழங்கள் மற்றும் பட்டை தூள் சேர்த்து சாப்பிடலாம்.  

5. கிரேவி: 

பட்டை, கிராம்பு, மிளகு ஆகியவை சேர்த்து ருசியான மற்றும் காரசாரமான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். பெரும்பாலான கிரேவி ரெசிபிகளுக்கு பட்டை சேர்க்கப்படுகிறது.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பட்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

 

 

 

  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement