மதியவேளையில் காஃபியை மட்டுமே குடிக்கவேண்டியதில்லை... இந்த 5 எனர்ஜி ட்ரிங்ஸும் ஹெல்திதாங்க!

ஹெல்தியா புத்துணர்வா வைக்கும் பானங்களும் இருக்கு. இந்த 5 ட்ரிங்ஸை ட்ரைப் பண்ணிதான் பாருங்களேன்.

NDTV Food  |  Updated: March 23, 2019 15:17 IST

Reddit
5 Energy-Boosting Afternoon Drinks That Aren't Coffee
Highlights
  • காபியை விட ஹெல்தியான பானங்களும் உண்டு.
  • கஃபைன் இல்லாத பானங்களில் ஆரோக்கியம் அதிகம் .
  • காபிக்கு பதில் க்ரீன் டீயை குடிக்கலாம்.

காலை முழுவதும் உழைப்பா உழைச்சிட்டு மதியவேளை உணவுதான் நமக்கு ரிலாக்ஸ். சாப்பிட்டு முடிச்சதும் சீட்ல வந்து உக்காந்தா வரும் பாருங்க ஒரு தூக்கம்!! அத கண்ட்ரோல் பண்ணவே முடியாது. நாம் சீட்லேயே உக்காந்து தூங்கி விழறதப் பார்த்து ஆபீஸ்ல எல்லோரும் சிரிக்கும்போது ஒரே அவமானமா இருக்கும். சரி தூக்கம் கலைய ஒரு காஃபி குடிச்சா சரியாப் போகும்னு நினைச்சி பலபேர் காஃபி குடிக்க போவாங்க.. காஃபி மட்டுமே குடிச்சு தூக்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லைங்க. அதவிட ஹெல்தியா புத்துணர்வா வைக்கும் பானங்களும் இருக்கு. இந்த 5 ட்ரிங்ஸை ட்ரைப் பண்ணிதான் பாருங்களேன்.

இளம் சூடான லெமன் வாட்டர் (Warm Lemon Water)

விலையும் குறைவு மற்றும் ஈஸியாகவும் நீங்களே செய்யக்கூடியது. இது நிச்சயம் உங்களை புத்துணர்ச்சியாக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். செரிமானத்தைத் தூண்டி பசியெடுக்க வைக்கும்.

2e2tlidg

ஸ்மூத்தி (Smoothie)

இதுவும் இரு ஹெல்த்தி கூஸ் மாதிரிதன். பாதி காய்கறிகள், பழங்கள், யோகர்ட் மற்றும் தண்ணீர் சேர்ந்தது. இதுபோன்ற ஹெல்த்தியான ஒன்றை சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி நிறைந்த பழங்களை சேர்ப்பதால், மீதி நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஸ்ட்ராபெர்ரி அல்லது அவகேடோ ஸ்மூத்திகளை சாப்பிடுவதால் மகிழ்ச்சியான மனநிலைக்கு பெரிதும் உதவும்.

527hgag8

இளநீர் (Coconut Water)

இளநீர் மகத்தானது என்று நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. இதில் உள்ள எலெக்ட்ரோலைட் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்கும். மெட்டபாலிஸத்தைத் தூண்டி எடை குறையவும் வழிவகுக்கும்.

sfm9ocpo

கோதுமை புல் ஜூஸ் (Wheatgrass Juice)

ஆன்டி இன்ஃப்ளமேட்டரி, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து இருப்பதால மதியத்துக்கு ஒரு பர்ஃபெக்ட்டான ஜூஸ் இது. வெறும் தண்ணீரில் கலந்து குடித்தால் சோர்வைப் போக்கி உடனடி சக்தியைத் தரும்.

3pb65838

க்ரீன் டீ (Green Tea)

பால் கலந்த டீ மற்றும் காபியை மட்டும் குடித்து சலித்துவிட்டது. அதற்கு பதில் இந்த க்ரீன் டீ குடியிங்கள். குறைந்த அளவு மட்டுமே கஃபைன் உள்ளதால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அமினோ அமிலம் இருப்பதால் கவனச்சிதறலை போக்கும். செரிமானப் பிரச்னை சரிசெய்யும். 

1k41kdjo

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement