அடர்த்தியான கூந்தலை பெற சில ஆயுர்வேத குறிப்புகள்!!

வெந்தயத்தில் வைட்டமின் ஏ, கே, சி, புரதம், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.  வெந்தயத்தை பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை, முடி உதிர்வு, வறட்சி ஆகியவை குணமாகும்.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 12, 2019 12:39 IST

Reddit
Ayurveda For Hair Growth: 5 Foods And Herbs That Can Increase Hair Volume
Highlights
  • கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தலாம்.
  • கூந்தல் செழித்து வளர நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் பயன்படுத்தலாம்.
  • தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்ய வல்லாரை கீரை சாப்பிடலாம்.

நம் வாழ்வியல் முறை, உணவு பழக்கம், இரசாயன பயன்பாடுகள் போன்ற காரணத்தால் முடி உதிர்வு ஏற்படுகிறது.  முடி உதிர்வை தடுக்க லட்சக்கணக்கில் செலவு செய்ய நம்மில் எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள்.  ஆனால் உதிர்ந்த கூந்தலை மீண்டும் அடர்த்தியாக வளர வைக்க நாம் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும்.  எப்போதுமே கூந்தல் மற்றும் சரும பராமரிப்பிற்கு ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.   கூந்தலை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க இந்த 5 மூலிகை பொருட்களை பார்ப்போம்.  

bhringraj oil

கரிசலாங்கண்ணி: 
கரிசலாங்கண்ணி கீரையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கிறது.  சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு கரிசலாங்கண்ணி கீரை சிறந்தது.  கரிசலாங்கண்ணி கீரையை உலர வைத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.  தேங்காய் எண்ணெயில் இந்த பொடியை சேர்த்து கொதிக்க வைத்து தலைமுடிக்கு தேய்த்து வரலாம்.  இந்த கூந்தல் தைலத்தை மயிர்கால்களில் படும்படி தேய்த்து அரைமணி நேரம் கழித்து கூந்தலை அலசி வரலாம்.  இதனால் தலைமுடி பிரச்சனைகள் எல்லாமே குணமாகும்.

Newsbeep
fenugreek seeds

 வெந்தயம்: 
வெந்தயத்தில் வைட்டமின் ஏ, கே, சி, புரதம், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.  வெந்தயத்தை பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை, முடி உதிர்வு, வறட்சி ஆகியவை குணமாகும்.  வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது வெளிப்பிரயோகம் செய்யலாம்.

amal oil

நெல்லிக்காய்: 
தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் சேர்த்து எண்ணெய் காய்ச்சி வைத்து கொள்ளலாம்.  இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் ஸ்கால்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  கூந்தல் வளர்ச்சியை தூண்டி, பொடுகு தொல்லையை நீக்கும்.  நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  தேங்காய் எண்ணெயில் இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி சேர்த்து 2-3 நிமிடங்கள் சூடு செய்து தலைக்கு தேய்த்து வரலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

triphala

 திரிபலா: 
திரிபலாவில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மைகள் இருக்கிறது.  இது ஸ்கால்பில் பொடுகு தொல்லையை நீக்குகிறது.  திரிபலா பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலைக்கு தேய்த்து வரலாம்.  செரிமான கோளாறுகள் மற்றும் கல்லீரல் செயல்திறன் குறைபாடு காரணமாக கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது.  இதனை சரிசெய்ய திரிபலா சூரணம் சாப்பிடலாம்.

brahmi oil

 வல்லாரை கீரை: 
வல்லாரை கீரையை சாப்பிடுவதால் மனம் மற்றும் உடல் ஆற்றுப்படுகிறது.  கூந்தல் வளர்ச்சி, வறட்சி, நுனி பிளவு, பொடுகு போன்ற பிரச்சனைகளை வல்லாரை சரிசெய்யும்.  வல்லாரை எண்ணெய் கொண்டு ஸ்கால்பில் மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement