இந்த 5 உணவுகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்!!!

உடற்பயிற்சி, உணவு பழக்கம் போன்றவற்றால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 04, 2019 13:54 IST

Reddit
Diabetes Diet: 5 Foods And Herbs That May Help Regulate Blood Sugar Levels
Highlights
  • உலகில் பெரும்பாலானோர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.
  • கற்றாலை, ஓட்ஸ், பட்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

உடலில் இன்சுலின் சுரப்பில் பிரச்சனை ஏற்பட்டால் நீரிழிவு நோய் உண்டாகும்.  நம் வாழ்வியல் முறை சீரற்று இருத்தலே நீரிழிவு நோய்க்கு காரணம்.   உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.  நீரிழிவு நோய்க்கு உகந்த சில உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.  

பாகற்காய்: 
இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைப்பதில் பாகற்காய்க்கு முக்கிய பங்கு உண்டு.  பாகற்காயின் சாறு, விதை என முழுவதுமே நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது.  அதனால் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. 

பட்டை: 
பட்டையில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக இருக்கிறது.  பட்டையில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.  செரிமானம், இன்சுலின், இரத்த அழுத்தம், ஆண்டிஆக்ஸிடண்ட், க்ளூக்கோஸ் ஆகியவற்றை உடலில் சீராக வைக்க உதவுகிறது.  

Newsbeep

வெந்தயம்: 
வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறது.  வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருப்பதுடன் இன்சுலின் சுரப்பின் அளவும் அதிகரிக்கிறது.  வெந்தயத்தை பொடித்து தினமும் சாப்பிட்டு வரலாம்.  இதனால் உடல் குளிர்ச்சியடைகிறது.  
 

qbon87m8

 

இஞ்சி: 
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.  உடலில் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க இஞ்சியை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  இஞ்சியை நறுக்கி, டீயில் சேர்த்து குடிக்கலாம்.  மேலும் இதனை பொடித்து மற்ற ரெசிபிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.  ஆண்டி-டயாபடிக் உணவுகளுள் இஞ்சியும் ஒன்று என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது.  


Listen to the latest songs, only on JioSaavn.com

 

opk0k7g8

 கற்றாலை: 
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு கற்றாலை பெரிதும் பயன்படுகிறது.  கணையத்தில் பீட்டா செல்களை உருவாக்கி இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க செய்கிறது.  கற்றாலையில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இதனை ஸ்மூத்தி அல்லது ஜூஸாக செய்து குடிக்கலாம். 


Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement