இரவில் நல்ல உறக்கம் பெற இந்த ஹெல்தி ட்ரிங்கை குடிக்கலாம்!!

கஃபைன் நிறைந்த பானங்கள், மதுபானம், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அதிகம் உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை உண்டாகும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 22, 2019 13:24 IST

Reddit
5 Healthy Bedtime Drinks To Get A Good Night's Sleep
Highlights
  • தூக்கமின்மை பிரச்னையால் தற்போது பலரும் அவதி படுகின்றனர்.
  • குளிர்பானங்களை அதிகம் உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது.
  • கஃபைன் நிறைந்த பானம், மது மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.

சிலருக்கு இரவு நேரத்தில் தூக்கம் சீராக இல்லாமல் இருக்கும்.  நல்ல தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள்.  நாள் முழுக்க வேலை செய்து களைத்து போய் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை.  இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்னை காரணமாக சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  தூக்கம் சீராக இல்லையென்றாலே உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.  இதன் விளைவாக, பகல் நேரத்தில் சோர்வாகவும், மூளை செயல்பாடுகள் மந்தமாகவும் இருக்கும்.  இதனை சரிசெய்ய மாத்திரை மருந்துகள் ஏதும் தேவையில்லை.  உணவிலேயே சரிசெய்து நல்ல தூக்கத்தை பெறலாம். 

வெதுவெதுப்பான பால்:

இரவு நேரத்தில் வெதுவெதுப்பான பால் குடிப்பது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும்.  தூக்கமின்மை பிரச்னைக்கு முக்கிய காரணம் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுவது தான்.  பாலில் கால்சியம் மற்றும் செரோடோனின் போன்ற பொருட்கள் இருப்பதால் மனதிற்கும் உடலிற்கும் அமைதி அளித்து நல்ல தூக்கத்தை கொடுக்கும். 

k48n3pfg

 

இளநீர்:

உடலில் மேக்னீஷியம் பற்றாக்குறை ஏற்படும்போது, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை உண்டாகும்.  இளநீரில் மேக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் ஆகியவை நிறைந்திருப்பதால் மனதை ஆற்றுப்படுத்தி தூக்கத்தை மேம்படுத்தும். 

03191sco

வாழைப்பழ ஷேக்:

வாழைப்பழத்தில் மேக்னீஷியம், பொட்டாஷியம், ட்ரிப்டோபான் மற்றும் அமினோ ஆசிட் போன்றவை இருக்கிறது.  இதனை சாப்பிடும்போது, தூக்கத்தை தூண்டக்கூடிய செரடோனினை உற்பத்தி செய்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.  வாழைப்பழம், பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து ஷேக் செய்து குடிக்கலாம். 

 
0ph3qogo

 

பாதாம் மற்றும் குங்குமப்பூ பால்:

பாதாம் பாலில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கிறது.  இது உங்கள் கோபம் மற்றும் மன அழுத்தத்தை சரிசெய்து சீராக வைத்திருக்கும்.  வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த பாதாம் பாலில் குங்குமப்பூ சேர்த்து குடித்து வரலாம்.  இது உங்கள் நரம்பு மண்டலத்தை சீராக இயங்க செய்து சிறப்பான தூக்கத்தை கொடுக்கும். ef5ammt8

 கேமோமைல் டீ:

இயற்கையாகவே கேமோமைல் டீயில் தூக்கத்தை தூண்டக்கூடிய ஃபேளவனாய்டு அபிஜெனின் என்னும் பொருள் இருக்கிறது.  இது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தி மனதையும் ஆற்றுப்படுத்துகிறது. 

sqjuho1o

 கஃபைன் நிறைந்த பானங்கள், மதுபானம், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அதிகம் உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை உண்டாகும்.  குளிர்பானங்களை தவிர்த்து மேல் சொன்னவற்றை குடித்து ஆழ்ந்த உறக்கத்தை பெற்றிடுங்கள். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com