உடல் எடை குறைக்க நீங்கள் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டியவை!!!

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியை காட்டிலும் உணவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 04, 2019 18:21 IST

Reddit
Weight Loss: 5 Healthy Diet Facts That Anyone Wanting To Lose Weight Must Know
Highlights
  • உடல் எடை குறைப்பதற்கு சரியான உணவு பழக்கம் தேவை.
  • நிறைய தண்ணீர் குடிப்பதாலும் உடல் எடை குறையும்.
  • இனிப்புகளால் உடல் எடை அதிகரிக்கும்.

உடல் எடை குறைப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை.  உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் ஒத்துழைப்பு இல்லாமல் உடல் எடை குறைப்பது சாத்தியமில்லை.  நீங்கள் முழுமையாகவும் கடுமையாகவும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கத்தை பின்பற்றுவது அவசியம்.  நம் வாழ்வியல் முறை காரணமாக தான் தற்போது கொலஸ்ட்ரால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுகிறது.  மேலும் இம்மாதிரியான நோய்கள் வர உடல் பருமன் தான் முக்கிய காரணம்.  உடல் எடையை குறைக்க சில முக்கிய குறிப்புகளை நீங்கள் தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.உணவு:

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியை காட்டிலும் உணவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  உணவு பழக்கத்தில் உங்கள் மனதை அடக்கி கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். புரதம், கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். 3t3do3c8

 

காய்கறிகள் மற்றும் பழங்கள்:

காய்கறிகள் மற்றும் பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.  நார்ச்சத்து நிறைந்த இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவு.  பசிக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக, வேகவைத்த காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். இனிப்புகள்:

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் இனிப்புகள்.  கெட்சப், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள், குளிர்பானங்கள், கேக் மற்றும் குக்கீஸ் போன்றவற்றில் இனிப்புகள் அதிகம் சேர்க்கப்படுகின்றன.  அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.  இதன் விளைவாக, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும். 

07ndc5h

 

கார்போஹட்ரேட்:

உடல் எடை குறைக்க லோ-கார்ப் உணவுகள் மிகவும் நல்லது.  முழுமையாக கார்போஹைட்ரேட்டை நிறுத்திவிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போய்விடும்.  அதனால் கார்போஹட்ரேட் நிறைந்த உணவுகளையும் அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது.தண்ணீர்:

தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  சாப்பிடுவதற்கு முன் நிறைய தண்ணீர் குடிப்பதால், குறைவான அளவே சாப்பிட முடியும்.  இதனால் உடல் எடை குறையும்.  மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.  உடலில் கலோரிகளை குறைக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கலாம். Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement