இனிப்பு பிரியர்களுக்கான ஆரோக்கியமான ஐந்து பொருட்கள்

NDTV Food  |  Updated: July 05, 2018 21:37 IST

Reddit
5 Healthy Foods To Satisfy Your Sugar Cravings
Highlights
  • சோர்வான மனநிலையை சரிசெய்ய இனிப்பு வகைகள் அதிகம் உதவுகின்றன.
  • உங்கள் உடலுக்கு தினமும் குறைந்தளவு இனிப்பு தேவைப்படுகிறது.
  • சியா விதைகளில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன
இனிப்பு வகை பிரியர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதிப்பது கடினமான செயலாகும். பொதுவாக நம் உடலுக்கு இனிப்பும் தேவை. முற்றிலுமாக இனிப்பு வகைகளை ஒதுக்கி விடக் கூடாது. அளவுக்கு அதிகமான இனிப்புகளையும் சாப்பிட கூடாது. நம்மைச் சுற்றி ஆரோக்கியமான இனிப்புப் பொருட்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

சியா விதைகள்

இது எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்கும் ஒமேகா 3 கொழுப்புகள் இதில் அதிகம் உள்ளன. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். இந்த சியா விதைகளில் 40% நார் சத்துக்கள் தான். அதனால் ஸ்மூத்தி, புட்டிங், டெசர்ட் வகைகளில் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.

chia seeds

பேரிச்சம்பழம்நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பேரிச்சம் பழம் நமது எனர்ஜியை அதிகரிக்கிறது. செயற்கையான சர்க்கரை இனிப்பை சாப்பிடுவதற்கு பதிலாக இதனை தாராளமாக சாப்பிடலாம். உங்களுக்குப் பிடித்தவாறு பாதாம், முந்திரி போன்ற நட்ஸ்களுடன் சேர்த்து 'கறுக் மொறுக்' என ருசிக்கலாம்.
 
dates have numerous health benefits

சர்க்கரை வள்ளி கிழங்கு

ஸ்டார்ச், வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து உள்ள வேர் காய்கறி வகையைச் சேர்ந்தது சர்க்கரை வள்ளி கிழங்கு. இது சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. இதை சும்மா வேக வைத்து சாப்பிட்டாலே நன்றாக இருக்கும். தவிர இலவங்கப் பட்டை பொடி சேர்த்து குறைந்த எண்ணெயில் வறுத்தும் சாப்பிடலாம்.
 
sweet potatoes

ஸ்நாக்ஸ்

ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்து கொண்டால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஓட்ஸ், உலர்ந்த பழ வகைகளால் ஆன ஸ்நாக்ஸ் எடுத்து கொள்வது நலம். ஆனால் அவைகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் இவற்றை வீட்டிலேயே தயார் செய்துக் கொள்ளுங்கள்.
 
protein bars

ஸ்மூத்தீஸ்

Commentsஉடனடியாக ஏதாவது சாப்பிடத் தோன்றும் பட்சத்தில் வீட்டிலிருக்கும் பழங்களை தயிரில் நறுக்கிப் போட்டு சாப்பிடுவது ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும். இதை உங்களது விருந்தினருக்கும் செய்துக் கொடுத்து அசத்தலாம். ஜூஸுக்கு பதில் இப்படி சாப்பிடுவதால் பழங்களில் உள்ள நார்ச்சத்து அப்படியே உங்களுக்குக் கிடைக்கும்.
 
smoothies

 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement