உடல் எடை குறைக்கும் ஸ்ட்ராபெர்ரி!1

100 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 33 கிராம் கலோரிகள் உள்ளது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 14, 2019 13:32 IST

Reddit
Weight Loss: 5 Low-Calorie Summer Fruits That Should Be Part Of Your Diet Today
Highlights
  • ஸ்ட்ராபெர்ரியில் நீர்ச்சத்து நிறைய உள்ளது.
  • வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம்.
  • கோடைக்காலத்தில் கிடைக்கும் பழங்களில் கலோரிகள் குறைவு.

 உடல் எடை குறைக்க வேண்டுமென்றால் கலோரிகள் குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.  கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியமானது.  தொடர்ச்சியாக லோ-கலோரி டயட்டை பின்பற்றி வந்தால் உடல் எடை நிச்சயம் குறையும்.  குறிப்பாக கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறப்பு.  உடல் எடை குறைக்கும் கலோரி குறைவான பழங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!ஸ்ட்ராபெர்ரி: 
சாலட், ஸ்மூத்தி, ஓட்மீல், பேன்கேக் போன்றவற்றில் ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து சாப்பிடலாம்.  100 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 33 கிராம் கலோரிகள் உள்ளது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  

strawberries

 ராஸ்பெர்ரி: 
உடல் எடை குறைக்க அடிக்கடி ராஸ்பெர்ரி சாப்பிடலாம்.  100 கிராம் ராஸ்பெர்ரியில் 53 கலோரிகள் இருக்கின்றது.  செரல்ஸ் மற்றும் ஸ்மூத்தியில் டாப்பிங்காக சேர்த்து சாப்பிடலாம்.  


Listen to the latest songs, only on JioSaavn.com

dr7or47g
 தர்பூசணி: 
தர்பூசணியில் 94 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது.  100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் இருக்கிறது.  இந்த பழத்தை சாப்பிடும்போது பசி உணர்வு இல்லாமல் இருக்கும்.
 
4mvqlkm
 பீச்: 
100 கிராம் பீச் பழத்தில் 39 கலோரிகள் இருக்கிறது.  இந்த பீச் பழத்தில் ஃபினோலிக் தன்மை இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.  மேலும் இதில் ஆண்டி-டயாபடிக் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருக்கிறது. 
ikl1ktm
 

பப்பாளி: 
100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள் இருக்கிறது.  இதனை அடிக்கடி சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது.  மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement