இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க இந்த 5 பழங்களை சாப்பிடலாம்!!

தனிப்பட்ட ருசியும் ஃப்ளேவரும் கொண்ட இந்த பழத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு 42 ஆக உள்ளது.  நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 12, 2019 11:43 IST

Reddit
Monsoon Diet For Diabetics: 5 Low-GI Fruits That May Regulate Blood Sugar
Highlights
  • தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வரலாம்.
  • பீச் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.
  • செர்ரியின் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.  குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  அடுத்ததாக தினசரி உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.  இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவை சீராக்க உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.  க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைவான உணவுகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  நீரிழிவு நோயாளிகள் எல்லா விதமான பழங்களையும் சாப்பிடுவதென்பது சாத்தியமில்லை.  க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைந்த சில பழங்களை பார்ப்போம்.  

1. பேரிக்காய்: 

நார்சத்து நிறைந்த இந்த பேரிக்காயை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதோடு, நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.  உடல் பருமனாக இருப்பவர்கள் பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.  இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.  இந்த பழத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு 40 என்பதால் தாராளமாக சாப்பிடலாம். 

2. பீச்சஸ்: 

தனிப்பட்ட ருசியும் ஃப்ளேவரும் கொண்ட இந்த பழத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு 42 ஆக உள்ளது.  நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது என்பதால் அடிக்கடி இதனை சாப்பிட்டு வரலாம்.  உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது. 

 

51doqa6o

 

 

3. ப்ளம்ஸ்:

மழைக்காலத்தில் மட்டுமே ப்ளம்ஸ் பெரும்பாலும் கிடைக்கிறது.  இதன் ருசி எல்லோரையும் விரும்பி சாப்பிட தூண்டும்.  இதில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.  அத்துடன் இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் 40 ஆக இருக்கிறது.  

636r66eg

 

 

4. ஆப்பிள்:

ஆப்பிள் எல்லா பருவ காலத்திலும் கிடைக்கக் கூடிய பழங்களுள் ஒன்று.  இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுந்த இந்த பழத்தை நீரிழிவு நோயாளிகள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரலாம். இதன் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு 39 ஆக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது.   

5. செர்ரி: 

பேக்கிங் ரெசிபிகளில் செர்ரி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த செர்ரியில் பொட்டாசியம், ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை இருக்கிறது.  இதன் க்ளைசமிக் இண்டெக்ஸ் 20 ஆக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.  

Comments

 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement