பருவகால மாற்றத்தின் போது உணவு பழக்கத்தையும் மாற்றுங்கள்!!

தண்ணீர், பழச்சாறுகள், ஹெர்பல் டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 10, 2019 16:30 IST

Reddit
Weight Loss: 5 Monsoon Diet Tips That May Help You Lose Some Kilos

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க இருக்கும் சூழலில் நம் உணவு பழக்கத்தையும் மாற்ற வேண்டும்.  எப்போதுமே உணவுகளை பொருத்தவரை அந்தந்த பருவத்திற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும்.  அப்படியாக சாப்பிடும்போதுதான் உடல் எடை குறைவதோடு ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.  உடல் எடை குறைக்கக்கூடிய டயட் குறிப்புகளை பார்ப்போம்.  

ஸ்நாக்ஸ்: 

மக்கா சோளத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடலாம்.  அதில் லேசாக வெண்ணெய் தடவி நெருப்பில் வேகவைத்து சாப்பிடலாம்.  இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு.  

corn cob 625

நீர்ச்சத்து: 

கோடைக்காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படும்.  அதனை சரிசெய்ய, அடிக்கடி தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும்.  தண்ணீர், பழச்சாறுகள், ஹெர்பல் டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.  

பழங்கள்: 

ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  நாவற்பழம், லிச்சி, ப்ளம்ஸ், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி முலாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.  இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது.  
 

ptl5cke

மசாலா டீ: 

இஞ்சி, மிளகு, கிராம்பு, பட்டை ஆகிய மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மசாலா டீயில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இதனை அடிக்கடி குடிக்கலாம்.  பால் மற்றும் சர்க்கரை சேர்க்காதவர்கள் என்றால் இந்த மசாலா டீயை தாராளமாக குடிக்கலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

h5n8hvto

 சூப்: 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும், உடல் எடை குறைக்கவும் சூப் குடிக்கலாம்.  சூப்பில் கலோரிகள் குறைவு என்பதால் இதனை அடிக்கடி குடிக்கலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement