மழைக்கால ஹெல்த் டிப்ஸ்: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் 5 விஷயங்கள்!

மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவும் உணவுக்குறிப்புகளை இங்குக் காணலாம்.

Edited by: Barathraj  |  Updated: July 28, 2020 19:10 IST

Reddit
Monsoon Diet: 5 Expert Diet Tips To Stay Healthy With Strong Immunity During The Rainy Season

மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுக் குறிப்புகள்

Highlights
  • Monsoons pose a great danger of common infections.
  • Here are some diet tips that can be useful to stay healthy.
  • Use these expert diet tips for boosting immunity during monsoon.

மழைக்காலம் வரத் தொடங்கி விட்டது. இதுவரை கோடை வெப்பம் ஒருவழியாக நம்மை வாட்டி வதைத்துவிட்டது. இனி வெப்பம் தணிந்து இதமாக இருக்கும். அதே நேரத்தில், மழைக்காலத்தில்தான் அதிகமாக நோய்த்தொற்றுகள் ஏற்படும். 

எனவே, நமது உடலை நாம்தான் பேணிக் காக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் நமது உடலைப் மேம்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இயற்கையாக நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்க வேண்டும். இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் ராதிகா கார்லே என்பவர் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுக் குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
            

மழைக்காலத்தில் ஆரோக்கியமான உடல்நலம் பெற 5 குறிப்புகள்

1. விட்டமின் சி நிறைந்த உணவுகள்

விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பப்பாளி, எலுமிச்சை, வதக்கிய தக்காளி, சிவப்பு கொடை மிளகாய் சட்னி ஆகியவற்றில் விட்டமின் சி சத்துகள் காணப்படுகின்றன. 

e7630aho

விட்டமின் சி சத்துள்ள உணவுகள்
 

2. வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்:

ஹோட்டல்கள், சாலையோரக் கடைகளில் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 

3. மசாலா உணவுகள்

மஞ்சள், மிளகு, பூண்டு போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் சாப்பிடலாம். இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மிகவும் குளிராக இருந்தால் மசாலா டீ கூட குடிக்கலாம். 

4. அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்

மழைக்காலம், வெயில் காலம் எந்த காலமாக இருந்தாலும், தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கவும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் வெளியேறும். உடல் அசுத்தங்கள் வெளியேறும். Listen to the latest songs, only on JioSaavn.com

2vls5ub

சுத்தமான நீரைக் குடிக்கவும் 

5. காய்கறிகள், பழங்களை கழுவவும்

உணவுப் பொருட்களில் அசுத்தங்கள், பாக்டீரியாக்கள் காணப்படும். எனவே, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு முன்பு, அதை சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement