காலையில் நீங்கள் செய்ய வேண்டியவை!!

உணவு பழக்கம் சீராக இருக்கும்போது உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 01, 2019 12:17 IST

Reddit
5 Morning Rituals For Weight Loss
Highlights
  • உடல் எடை குறைக்க காலை நேரம் தான் சிறந்தது.
  • காலை நேரத்தில் மெட்டபாலிசம் வேகமாக இருக்கும்.
  • காலை எழுந்தவுடன் வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம்.

நீண்ட நேர உறக்கத்திற்கு பிறகு உடலை புத்துணர்வாக வைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  காலை நேரத்தில் உடலில் மெட்டபாலிசம் வேகமாக இருக்கும்.  காலை நேர உணவை தவறாமல் சாப்பிட வேண்டும்.  உணவு பழக்கம் சீராக இருக்கும்போது உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  வெந்நீர்:

காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.  வெந்நீர் செரிமான மண்டலத்தை க்ளென்ஸ் செய்து மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகிறது.  ஆயுர்வேத குறிப்புப்படி காலை எழுந்தவுடன் இரண்டு கப் வெந்நீர் குடித்தால் உடல் சுத்தமாக இருப்பதுடன் நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்கும்.  வெந்நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.  இதனால் உடலுக்கு ஆண்டிஆக்ஸிடண்ட் கிடைக்கிறது.  
soda waterதண்ணீர் பாட்டில்:

தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.  தண்ணீர் தான் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.  நிறைய தண்ணீர் குடிப்பதால் உணவு மற்றும் கலோரிகள் நிறைந்த குளிர்பானங்கள் குடிப்பது குறையும்.  நாள் ஒன்றுக்கு நிச்சயம் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.  உடல் எடை குறைக்க நிறைய நீர் அருந்துவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள். 


drinking waterபுரதம் மற்றும் நார்ச்சத்து:

காலை உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  அதிகபடியான புரதம் நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைக்க உதவும்.  காலை உணவில் 35 கிராம் புரதம் இருக்க வேண்டும்.  முட்டையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.  காலை உணவிற்கு முட்டை மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.  eggs


 

ஸ்நாக்ஸ்:

ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.  எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.  அதனால், பசிக்கும் நேரத்தில் சுண்டல், பழங்கள், வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். best tiffin recipes 2உடற்பயிற்சி:

உடல் எடை குறைக்க தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது.  தினசரி 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும்.  உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.  மேலும் உடற்பயிற்சி செய்வதால், மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் குறைக்கப்படுகிறது.  உடலும் மனமும் சீராக இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம்.  leg exercise 620x350

Your body burns more calories after your workout, which is called excess post-exercise oxygen consumptions (EPOC), therefore working out in the morning can prove to be a great start to your day and further in your journey to weight loss. Working out in mornings or indulging in any physical activity early in the day also stabilises your sleep cycle, which is another crucial factor for weight loss.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement