வீட்டுத் தோட்டத்தை பாதுகாக்க 5 இயற்கை முறை பூச்சி விரட்டிகள்

பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்லாது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கூட தீங்கானது

Sarika Rana  |  Updated: July 04, 2018 19:56 IST

Reddit
5 Natural Pesticides You Could Use To Grow Your Own Kitchen Garden
இன்று பலரும் சொந்தமாக காய்கறிகள், பழங்களை தங்களுடைய வீட்டு தோட்டத்தில் வளர்க்க விரும்புகின்றனர். ஏன் கூடாது? தங்களுடைய சொந்த தோட்டத்திலே தீங்கான ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு இல்லாத உணவை தயாரிக்க யார் தான் விரும்பமாட்டார்கள்?. பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்லாது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கூட தீங்கானது. இந்த ராசயன பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் தீவிர உடல்நலக் குறைவு, சுவாசக் கோளாறு முதல் இருதய பிரச்சனைகள் வரை பல்வேறு தீங்குகளுக்கு காரணமாக இருக்கிறது. பின்னர் எவ்வாறு செடிகளை பூச்சிகளின் தாக்கத்திலிருந்து காப்பது என நீங்கள் யோசித்தால், உங்கள் சமையலறையிலே பல அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. இவைகள் ராசயனம் இல்லாத இயற்கை பூச்சி விரட்டிகள் செய்யப் பயன்படும். நாங்கள் கீழே இயற்கையான, செலவு குறைந்த பூச்சிக் விரட்டிகளை எவ்வாறு செய்வது என்பதை பட்டியலிட்டிருக்கிறோம்.1. வேப்பம் இலை

வேம்பு நீண்ட காலமாக மருத்துவம் மற்றும் சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பூச்சிகளை விரட்டவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ மூலிகை கசப்பான சுவை இருந்தாலும், வலுவான நறுமணம் உள்ளதால் பூச்சிகளை செடிகளிலிருந்து விலக்கி வைக்கும். மேலும் விலங்குகள், பறவைகள், செடிகள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கற்றது. வேப்பம் எண்ணெய்யை செடிகளின் மீது தூவுவது சிறந்தது. இது 22 நாட்களுக்கு செடியின் மீது உயிர்ப்புடன் இருக்கும். வேப்பம் எண்ணெய்யை ஒரு சோப்புத் தண்ணீருடன் சேர்த்து கிளறவும். பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உடனடியாக பயன்படுத்தலாம்.
 
neem new 625

2. உப்பு ஸ்ப்ரே

வீட்டிலே பூச்சி விரட்டியை தயார் செய்ய இயற்கையான, சிறந்த வழி உப்பு ஸ்ப்ரே. உண்மையாக இது பூச்சிகளை தடுப்பதோடு மட்டுமில்லாது, செடிகள் மெக்னிஸியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சுவதை அதிகரித்து பாஸ்பர், சல்ஃபர் போன்ற முக்கிய சத்துககளை செடிகள் எடுத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரில் சிறிது உப்பை சேர்த்து கலக்கலாம். பின்னர் அதை ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து செடிகளின் மீது தெளிக்கலாம், நீங்கள் செடியினுடைய அடித்தளத்தில் வாரம் ஒருமுறை உப்பை தெளிக்கலாம்

3. வெங்காயம் மற்றும் இஞ்சி ஸ்ப்ரே

கொஞ்சம் இஞ்சி மற்றும் ஒரு சிறய வெங்காயம் எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீரை சேர்த்துக் ஊறவையுங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவு கேயென் பெப்பர் மற்றும் சோப் கலவை சேர்த்து கொள்ளுங்கள். செடிகளின் மீது பயன்படுத்தி பூச்சிகளை தாக்குவதை தடுக்கலாம்.
 
onion and garlic

4. யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸின் வலுவான நறுமணம் பூச்சிகளை தடுக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த எண்ணெய்யை சிறிதளவு உங்களுடய செடிகளில் தெளித்து முடிவுகளை பாருங்கள். தொடர்ச்சியாக இதை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.

5. கிரிஸான்தமம் மலர் தேநீர்

Commentsகிரிஸான்தமம் மலர்கள், செடிகளுக்கு தேவையான ராசயனமான பைரேத்ரம் கொண்டுள்ளது. இந்த பொருள் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக நம்பப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உலர்ந்த மலர்களை ஒரு பாத்திரம் தண்ணீரில் 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஆற வைத்து ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து பயன்படுத்துங்கள். இதை இரண்டு மாதம் வரை சேமித்து வைக்கலாம். இதை மேலும் பயனுள்ளதாக்க, கொஞ்சம் வேப்பம் எண்ணெய்யை இதில் சேர்க்கலாம்.உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement