தயிருடன் இந்த ஹெல்தி டாப்பிங்ஸ் சேர்த்து சாப்பிடுங்கள்!!

தர்பூசணி, மாம்பழம், கிவி, ஆரஞ்சு, மாதுளை என உங்களுக்கு பிடித்த பழங்களை மசித்து தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 24, 2019 16:35 IST

Reddit
Weight-Loss-Friendly Snacks: 5 Nutritious Toppings For Your Bowl Of Probiotic Dahi (Curd)
Highlights
  • உடல் எடை குறைக்க தயிர் சிறந்த உணவு.
  • கலோரிகள் குறைந்த தயிரில் புரதம் மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது.
  • பெர்ரீஸ், சாக்லேட், பழங்களை தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

உடல் எடை குறைப்பதையே தங்கள் வாழ்க்கை லட்சியங்களாக கொண்டு இங்கு பல பேர் இருக்கிறார்கள்.  நீங்கள் என்னதால் உடல் எடை குறைக்க உணவு கட்டுப்பாடு மேற்கொண்டாலும், உடற்பயிற்சி என்பது மிகவும் அத்தியாவசியமானது.  உடல் எடையை குறைக்க தற்போது கலோரிகள் குறைந்த உணவுகளும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.  அப்படிப்பட்ட உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், உடல் எடை குறைக்கக்கூடியதாகவும் இருத்தல் அவசியம்.  அந்த பட்டியலில் தயிர் தான் முதலில் இருக்கிறது.  தயிரில் கால்சியம், புரதம் இருக்கிறது.  கலோரிகள் குறைந்த இந்த உணவில் குடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடிய பாக்டீரியாக்களும் இருக்கிறது. தயிர் தசைகளை உறுதியாக்குவதுடன் உங்களை நிறைவாகவும் வைத்திருக்க உதவுகிறது.  தினமும் ஒரு சின்ன கப் தயிர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.  ஆனால் வெறும் தயிரை மட்டும் சாப்பிட உங்களுக்கு விருப்பமில்லையா? கவலை வேண்டாம்.  தயிரை உங்களுக்கு பிடித்த சுவையில் ஆரோக்கியமாக மாற்ற சில எளிய குறிப்புகள் இங்கே. 8o8lkgr 

பெர்ரீஸ்:

பெர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், மினரல் ஆகியவை இருக்கிறது.  குறைந்த அளவே கலோரிகள் கொண்ட பெர்ரி, சருமம் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் சிறப்பாக இருப்பதோடு, மலச்சிக்கலையும் தடுக்கிறது.  ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் மல்பெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நறுக்கியோ அல்லது மசித்தோ தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.  ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கும். tf1gk1ho 

க்ரானோலா:

க்ரானோலாவில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.  டோஸ்டட் ஓட்ஸ், நட்ஸ், ட்ரைடு பெர்ரீஸ் போன்றவை சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த க்ரானோலாவில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், இரும்பு சத்து, மக்னீஷியம் மற்றும் ஃபைட்டோநியூட்ரியண்ட்ஸ் ஆகியவை இருக்கிறது.  தயிருடன் சேர்த்து சாப்பிட இன்னும் ஆரோக்கியமானது.1at2sppo 

காய்கறிகள்:

தயிரில் காய்கறிகளை சேர்த்து சாப்பிட நார்ச்சத்து அப்படியே கிடைக்கிறது.  உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை மசித்து, அத்துடன் உப்பு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தயிருடன் கலந்து சாப்பிடலாம். பழங்கள்:

தர்பூசணி, மாம்பழம், கிவி, ஆரஞ்சு, மாதுளை என உங்களுக்கு பிடித்த பழங்களை மசித்து தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.  இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சருமத்தையும் பராமரிக்கிறது.  பழங்களில் இருக்கக்கூடிய இயற்கையான இனிப்பு சுவை உடலுக்கு நன்மை பயக்கிறது. தேங்காய் துருவல்:

ஸ்மூத்தீஸ், தானியங்கள் நிறைந்த காலை உணவு போன்றவற்றில் தேங்காய் துருவலை சேர்த்து சாப்பிட உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன.  இதுமட்டுமல்லாமல், தயிருடன் டார்க் சாக்லேட், தேன், உலர் திராட்சை, விதைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com