எளிமையான 5 ஓட்ஸ் ரெசிபிகள்!!

ஓட்ஸ், உளுந்து, கடலைப்பருப்பு, தயிர், கேரட் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஓட்ஸ் இட்லி கலோரிகள் குறைவான உணவு.

NDTV Food  |  Updated: July 04, 2019 18:40 IST

Reddit
5 Quick Oats Recipes For Weight Loss

ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஆரோக்கியமாக இருக்க ஓட்ஸ் சாப்பிடலாம்.  கொழுப்பு சத்து மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  ஓட்ஸ் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாது.  ஓட்ஸின் மேலும் சில நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.  

இரத்த அழுத்தம்: 
ஓட்ஸில் அவனந்த்ரமைட்ஸ் இருப்பதால் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.  உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியாக செய்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.  

இருதயம்: 
நார்ச்சத்து இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.  

நீரிழிவு நோய்: 
ஓட்ஸில் பீட்டா- க்ளூக்கான் இருப்பதால் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  
 

oats porridge 

உடல் எடை: 
பசி, செரிமானம் மற்றும் மலச்சிக்கலை போக்கும் திறன் ஓட்ஸிற்கு உள்ளதால் உடல் எடை குறைக்க சிறந்த உணவு.  ஓட்ஸ் கொண்டு சில ரெசிபிகளை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.  


ஆர்கானிக் ஓட்ஸ் போரிட்ஜ்: 
ஓட்ஸ், ஆளி விதை, எள், உலர்ந்த திராட்சை, ஆப்பிள், பட்டை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபி உங்கள் நாளை துவங்க ஏற்றது.  இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆற்றலை தருகிறது.  


oats khichdi 

ஓட்ஸ் கிச்சடி: 
ஓட்ஸ், பாசிப் பருப்பு, மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த ஓட்ஸ் கிச்சடி மிக எளிதில் ஜீரணமாகும்.  கலோரிகள் குறைந்த உணவு என்பதால் உடல் எடை குறையும். 


ஓட்ஸ் இட்லி: 
ஓட்ஸ், உளுந்து, கடலைப்பருப்பு, தயிர், கேரட் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஓட்ஸ் இட்லி கலோரிகள் குறைவான உணவு.  எளிதில் தயார் செய்யக்கூடிய இந்த உணவில் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது.  


p10lv28o
 

ஓட்ஸ் அண்ட் யோகர்ட் போரிட்ஜ் பர்ஃபைட்: 
ஓட்ஸ், யோகர்ட், பிஸ்தா, பால், பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து செய்யப்படும் இந்த போரிட்ஜ் சில நிமிடங்களிலேயே செய்து விடலாம்.  


Listen to the latest songs, only on JioSaavn.com

 parfait

 

வால்நட்-ப்ளூபெர்ரி ஓட்மீல்: 
வால்நட், ப்ளூபெர்ரி, முழு கோதுமை, ஓட்மீல், தேங்காய் ஆகியவை சேர்த்து குக்கீஸ் செய்து சாப்பிடலாம்.  அவ்வப்போது ஏற்படும் பசியை போக்க இது சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.  


Comments

qs2i523s
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement