அழகை அதிகரிக்கும் ஆயுர்வேதம்!!

காலை மற்றும் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.  வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். 

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 27, 2019 18:25 IST

Reddit
5 of Ayurveda's Best Kept Secrets for Great Health, Fitness & Glowing Skin
Highlights
  • கரிசலாங்கண்ணியை தலைமுடிக்கு பயன்படுத்தி வரலாம்.
  • இஞ்சி சாறு குடித்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராது.
  • செரிமானம் சீராக இருக்க வெந்நீர் குடிக்கலாம்.

அழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால் ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றுங்கள்.  எவ்வித பக்க விளைவுகளும் இன்றி உடலை வலுவாக்கும்.  சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.  இயற்கை பொருட்களை கொண்டு அழகை எப்படி மெருகேற்றுவது என்று பார்ப்போம். அடர்த்தியான கூந்தலுக்கு:

மோர், பழங்கள், தேங்காய் எண்ணெய், தர்பூசணி, முலாம்பழம், திராட்சை மற்றும் மாதுளை ஆகியவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைத்துவிடும்.  தினசரி இளநீர் குடிப்பதாலும் கூந்தல் நன்கு வளரும்.  மேலும் ப்ரிங்கராஜ் எண்ணெயை கூந்தலுக்கு தடவி வரலாம்.  இதனால் முடி கொட்டுவது நின்று, கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.  மயிர்கால்களும் உறுதியாகும்.  

Newsbeep
hair fall

பொலிவான சருமத்திற்கு:

சந்தனம் என்பது இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்.  சருமத்திற்கு குளிர்ச்சியை கொடுத்து அழகையும் பாதுகாக்கிறது.  பருக்கள் வராமல் தடுத்து சருமத்தை பளிச்சிட செய்யும்.  ஒரு தேக்கரண்டி சந்தன பொடி, மஞ்சள், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.  இது தவிர கேரட், பீட்ரூட் மற்றும் மாதுளை சாறு குடித்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.  

skin 620x350

செரிமானம்:

தினமும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து உட்கொண்டு வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம், அஜீரணம், வாயு தொல்லை போன்றவை ஏற்படாமல் இருக்கும்.  மேலும் செரிமானத்திற்கான சுரப்பிகளும், உமிழ்நீர்களும் சீராக சுரக்க உதவும்.  

stomach pain

நோய் எதிர்ப்பு சக்தி:

சீரகம், மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  திசுக்கள் மற்றும் செல்களின் உள்ளே சென்று ஆற்றலை அதிகரிக்கும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

immune system 625

உடல் எடை குறையும்:

உடல் எடையை குறைக்க, செரிமானம் சீராக இருப்பது அவசியம்.  சரியான நேரத்திற்கு சாப்பிட்டு வரவது நல்லது.  காலை மற்றும் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.  வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.  இதனால் கலோரிகள் குறைந்து உடல் எடையும் குறையும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement