ஹோலி பண்டிகைக்கு முன் சருமத்தையும் முடியையும் பாதுகாத்துக் கொள்ள 5 டிப்ஸ்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை வரவுள்ளது. ஹோலிப் பண்டிகை இந்து மதப் பண்டிகைகளில் ஒன்று. இந்தப் பண்டிகை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது.

   |  Updated: March 19, 2019 15:21 IST

Reddit
5 Pre-Holi Tips For Skin And Hair Care
Highlights
  • ஹோலி பண்டிகை வண்ணங்களின் திருவிழாவாக அறியப்படுகிறது.
  • ஹோலி வண்ணப்பொடிகள் முடி மற்றும் சருமத்தை வெகுவாக பாதிக்கிறது.
  • ஹோலி விளையாட்டிற்கு முன் செய்து கொள்ள வேண்டிய பாதுகாப்புகளில் கவனம் செலுத

வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை வரவுள்ளது. ஹோலிப் பண்டிகை இந்து மதப் பண்டிகைகளில் ஒன்று. இந்தப் பண்டிகை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய மார்கெட்டுகளில் வரும் வண்னங்ப்பொடிகள் சருமத்தையும் முடியையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இந்த கெமிக்கல்கள் மிகவும் அபாயகரமானவை. இதனால் அரிப்பு, சருமம் வெடித்து போகுதல் போன்றவை ஏற்படலாம். இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட எளிமையான 5 வழிகளை பார்ப்போமா....

1. ஐஸ் கட்டிகள்: ஹோலி விளையாட்டிற்கு முன் எந்தவொரு எண்ணெய்யையும் தடவுவதற்கு முன்பும் ஐஸ் கட்டிகளினால் சருமத்தில் 10 நிமிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் மூடிவிடும். இது முடிந்ததும் ஆர்கானிக் சன்ஸ்கீரீன் அல்லது எண்ணெய்யை போட்டுக் கொள்வது நல்லது. 

ice cubes

2. பாதாம் எண்ணெய்: சருமத்திற்கு அழகைக் கொடுப்பது பாதாம் எண்ணெய். ஹோலி விளையாடுவதற்கு முன் உடல் முழுவதும் எண்ணெய்யைத் தடவிக் கொள்வது மிகவும் நல்லது. பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ உள்ளது. சருமத்தை பொலிவாக்குவதுடன் சருமத்தின் மீது ஒரு லேயர் போல் படர்வதால் வண்ணங்களை சருமத்தின் மீது படாமல் வைத்துக் கொள்கிறது. வண்ணங்கள் உடலில் ஒட்டியிருந்தாலும் சருமத்தை பாதிப்பதில்லை. 

almond oil 625

3. சன் ஸ்கீரின்: வெயிலில் அதிக நேரம் இருப்பதால் சருமம் கறுத்துப் போக வாய்ப்புகள் அதிகம். கறுப்பு நிறமாகுவதைத் தடுக்க சன் ஸ்கீரின் மாய்ஸ்ச்ரேசரைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை பாதுக்காக்கும். 

sunscreen

4.தேங்காய் எண்ணெய்: ஹோலிப் பண்டிகைக்கு முன் தலை முழுவதும் தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துக் கொள்வது நல்லது. தேங்காய் எண்ணெய் லேயர் போல் படிந்து கொள்வதால் வண்ணப் பொடிகள் முடியைப் பாதிப்பதில்லை.

coconut oil

5. பெட்ரோலியம் ஜெல்லி: ஹோலி விளையாட்டின் போது உதட்டிற்கு லிப் பாம் போட்டுக் கொள்வதை விட பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக் கொள்வது நல்லது. இது அடர்த்தியாக இருப்பதால் நீண்ட நேரம் சருமத்தில் இருக்கும். இதை விரல் நுனிகள் காதின் பின்புறம் மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் தடவிக் கொண்டால் நல்லது. 

petroleum jelly

ஹோலிப் பண்டிகையை சருமத்தையும் கூந்தலையும் பாதுகாத்து கொண்டு கொண்டாடுங்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com

Disclaimer:

The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement