உடல் எடையை குறைக்க வீட்டில் சமைத்த உணவே சிறந்தது

உடல் எடை குறைய நீங்கள் செய்யவேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: October 28, 2018 21:13 IST

Reddit
Weight Loss: 5 Reasons Why Home-Cooked Indian Food Is Your Best Bet to Lose Weight

இந்திய உணவுகளில் எவ்வளவு ஆரோக்கியம் நிறைந்திருக்கிறதோ அதே அளவு உடலில் நோய்கள் உருவாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக, இந்திய உணவுகளில் அதிகபடியான கொலஸ்ட்ரால், கலோரிகள் போன்றவை இருக்கிறது. இந்திய பாரம்பரியப்படி பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைத்து சாப்பிடுவது வழக்கம் கிடையாது. ஆனால் வெளிநாடுகளில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே சாப்பிடுவார்கள். உடல் எடை அதிகரிக்க இதுவே காரணம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உடல் எடையை அதிகரிக்கவே செய்யும்.

உடல் எடையை குறைக்க நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். கலோரிகள் குறைவான உணவை நிறைய உட்கொள்ளலாம். நீங்கள் உண்ணும் உணவு உங்களை நாள் முழுக்க நிறைவாகவும், ஆரோக்கியமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருந்திட வேண்டும். அதேபோல், உடல் எடை குறைப்பில் உணவுக்கு அடுத்ததாக இருப்பது உடற்பயிற்சி. தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். உடல் எடை குறைய நீங்கள் செய்யவேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.

indian food

பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்திடுங்கள்

பெரும்பாலான இந்திய சமையல்களில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை. புதிதாக பறித்த காய்கறிகள், புதிதாக அரைத்த மசாலா பொருட்கள் மட்டுமே இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடுகிறது.

மசாலா பொருட்கள்

கிராம்பு, ஏலக்காய், சீரகம், மஞ்சள், இஞ்சி என மசாலா பொருட்கள் எல்லாவற்றிலுமே உடலுக்கு தேவையான நன்மைகள் மிகுந்திருக்கிறது. இந்த மசாலா பொருட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானத்தை சீராக்கி, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடல் எடை குறைய இம்மாதிரியான இயற்கை பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

எண்ணெய்கள்

பாரம்பரிய இந்திய உணவுகள் கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் தயார் செய்யப்படுகிறது. செக்கில் அரைக்கப்பட்டு கிடைக்கும் எண்ணெயில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து நிறைந்திருக்கிறது. ஆனால், தற்போது நம் சமையலறையை ரீஃபைண்ட் எண்ணெய்கள் ஆக்கிரமித்து விட்டன. உடல் எடையை குறைத்து, கொலஸ்ட்ராலை தடுக்கக்கூடியது தேங்காய் எண்ணெய். உணவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

மஞ்சள் மற்றும் நெய்

மஞ்சள் மற்றும் நெய்யை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு மிகவும் நல்லது. இதில் உடலில் வீக்கத்தை உண்டாக்காமல் பார்த்து கொள்ளும். உடல் எடை கூடாமல் இருக்க இவற்றை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.

உணவு பழக்கம்

கடைகளில் கிடைக்கக்கூடிய உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக இந்திய உணவுகள் எல்லாவற்றிலும் ஆரோக்கியம் சார்த்த பொருட்கள் சேர்க்கப்படுகிறது. துரித உணவுகளை அதிகம் உண்பதால் உடல் எடை கூடும். ஆரோக்கியமும் கெட்டு போகும். அதனால் அவற்றை தவிர்த்திடுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com