கோடைக்காலத்தில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் டயட்!!

கோடையில் மிக எளிதில் உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 10, 2019 11:38 IST

Reddit
Diabetes Diet: 5 Summer Diet Tips To Manage Diabetes
Highlights
  • உடல் மெட்டபாலிசத்தில் ஏற்படும் சீரற்ற தன்மைதான் நீரிழிவு நோய்.
  • மாம்பழத்தில் இனிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் அளவாகவே உட்கொள்ள வேண்டும்.
  • பழச்சாறுகள் அருந்துவதை காட்டிலும் அப்படியே சாப்பிடலாம்.

சர்க்கரை நோயால் உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில் வரும் 2030 ஆம் ஆண்டு உலகளாவில் 98 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு என்பது அவசியம்.  இரத்த சர்க்கரையை சீராக வைத்து கொள்ள சில டயட் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.  இப்போது கோடைக்காலம் என்பதால், வெப்பத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக உங்கள் உணவு பழக்கம் இருந்தால் இன்னும் சிறப்பு.  கோடைக்கேற்ற சில டயட் ரெசிபிகளை பார்ப்போம்.  பழச்சாறுகள்:

பழச்சாறுகளில் நார்ச்சத்து என்பது மிகவும் குறைவு.  அதில் இயற்கையான சர்க்கரை அளவு தான் அதிகம்.   கோடையில் தாகம் தீர்ப்பதற்கு குளிர்ச்சியான இந்த பழச்சாறுகளை அருந்தலாம்.  ஆனால் வீட்டிலேயே செய்து, வடிகட்டாமல் குடிப்பதுதான் சிறந்தது.  இனிப்புகளை தவிர்க்கவும்: 

மாம்பழத்தில் இயற்கையாகவே அதிகபடியான இனிப்பு உள்ளது.  கோடையில் நீங்கள் மேங்கோ ஷேக் குடிக்க எண்ணி கடைகளில் கிடைப்பவற்றை வாங்கி குடித்தால் அது நிச்சயம் உங்கள் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.  ஏனென்றால், அதில் சர்க்கரை, விப்டு க்ரீம் அல்லது ஐஸ்கிரீம் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.  அதனால் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.  அரைத்து குடிப்பதற்கு பதிலாக அப்படியே சாப்பிடலாம்.  

mango shake
 

நார்ச்சத்து: 

காலை நார்ச்சத்து நிறைந்த உணவுகளையே சாப்பிடலாம்.  ஓட்ஸ், வாழைப்பழம், முட்டை போன்றவற்றை காலை உணவாக சாப்பிடலாம்.  பழங்கள் மற்றும் செரல் ஆகியவற்றை தவிர்க்கலாம்.  அவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பெர்ரீஸ் மற்றும் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடலாம்.  

gusbftp 

தண்ணீர்: 

கோடையில் மிக எளிதில் உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  உடலில் நீரிழப்பு ஏற்படுவதும் ஒரு விதத்தில் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாய் அமைகிறது.  நிறைய தண்ணீர் குடிக்கும்போது தான் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  உடலில் உள்ள அதிகபடியான சர்க்கரை மற்றும் நச்சுக்கள் சிறுநீர் வழியே வெளியேறும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement