கோடைக்காலத்தில் சுவைக்க வேண்டிய 5 பழங்கள்

   |  Updated: June 04, 2018 12:55 IST

Reddit
5 Summer Fruits In India You Cannot Afford To Miss
Highlights
  • வெப்பமண்டல தேசமாக இருப்பதால், இந்தியா நீண்ட காலமாக கோடைகாலத்தை அனுபவிக்கு
  • இந்தியாவின் கோடைகால பழங்கள் அதிக அளவில் உள்ளது
  • மாம்பழம் இந்தியாவின் தேசிய பழம்
வெப்பமண்டலத்தில் இருப்பதால் நாம் மற்ற நாடுகளை விட அதிக மாதம் வெயிலை சமாளிக்க வேண்டிய நிலைமை நமக்கு.அதிகம் 47 டிகிரி வெயிலை நாம் எதிர்கொண்டாலும் பல நாட்கள் குளிர் காலத்தை விட வெயில் காலத்தை தான் எதிர்பாத்து இருப்போம். காரணம்? இந்தியாவில் கிடைக்கும் கோடைக்கால பழங்கள் தான். 

நாம் தவிர்க்க முடியாத 5 முக்கிய கோடைக்கால பழங்கள் 

1. மாம்பழம் 

நம்மால் தவிர்க்க முடியாதா பழம் மாம்பழம்; மா, பலா, வாழை என என எப்பொழுதுமே மாம்பழம் முன்னிலை வகிக்கும். புத்தருக்கு பிடித்த பழம் இது என்று சொல்வதுண்டு, மேலும் பல ஹிந்து வேதத்திலும் மாம்பழத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இதில் அல்போன்ஸா, இமாம்பசந்த், மல்கோவா என்று பல வகையுண்டு. நிச்சயம் இதை சுவைக்க மறக்காதீர்கள்.  
mangoes

2. தர்பூசணி 

இதற்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு; அதாவது சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம். 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது. 

 

watermelon 620x350

3. கிர்ணிப்பழம்

தர்பூசணியை தொடர்ந்து கிர்ணிப்பழத்திலும் அதிக தண்ணீர் சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழமும் கண்ணுக்கு நல்லது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும்  சி இன்ஃ பக்சன் தீர்ப்பதோடு  சருமத்தை பொலிவடைய செய்யும். 
 

muskmelon

4.மல்பெர்ரி 

இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட இந்த பழத்தில் அதிக பாரம்பரிய மருந்து குணங்கள் உண்டு. வேரிலிருந்து பழம் வரை அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள்  புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது. 
 

mulberry

5. நாவப்பழம் 

நாவப்பழத்தின் தனித்துவமான சுவையே இப்பழத்தின் சிறந்த அம்சம். மற்ற பழங்கள் போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பலம் இது. 1.41 மில்லி இரும்பு சத்து , 15 மில்லி கால்சியம் மற்றும் 18 மில்லி வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம் இது. 

Comments 
jamun black plum summers

 

கோடை முடிவதற்குள் இந்த பழங்களை சுவைத்திடுங்கள். 
 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement