காய்கறி மற்றும் பழங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு கழுவுவது எப்படி.. 5 டிப்ஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மத்தியில், மார்கெட்டில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவது பாதுகாப்பு குறித்து நம் மனதில் கவலைகளை உருவாக்கி வருகிறது.

   |  Updated: April 24, 2020 18:49 IST

Reddit
5 Tips To Properly Wash Fruit And Vegetable Produce Before Consumption

கொரோனா வைரஸ்: முறையாக கழுவப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது காலத்தின் தேவை.

Highlights
  • சாப்பிடும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது கொரோனா
  • காய்கறிகள் மற்றும் பழங்கள் சரியாக கழுவி பயன்படுத்துவது அவசியம்
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுவதற்கான சில டிப்ஸ்

கொரோனா வைரஸ் நேரத்தில் நாம் எல்லோரும் சாலட் மற்றும் பழங்கள் சாப்பிடுவதற்குக் கூட பயப்படுகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மத்தியில், மார்கெட்டில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவது பாதுகாப்பு குறித்து நம் மனதில் கவலைகளை உருவாக்கி வருகிறது. நன்கு கழுவிய பின் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளச் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அவற்றைக் கழுவச் சரியான வழி தெரியவில்லையா? வருத்தப்பட வேண்டாம்! உங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவுவதற்கான சிறந்த முறைகள் பற்றி இங்கே பேசப்போகிறோம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சரியாகக் கழுவ உங்களுக்கான டிப்ஸ்:

உங்கள் பழங்கள், கீரைகள், வேர் காய்கறிகளும் கழுவ பல்வேறு வழிகள் இங்கே.

1. உங்கள் ஆரோக்கியம் முக்கியம்

முதலில் அவற்றைக் கழுவுவதற்கு முன்பு, உங்கள் உள்ளங்கை களையும் முன்கைகளையும் குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும். மேலும், உங்கள் உடைகள் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது காய்கறிகள் மீது கிருமிகள் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கும்.

2. ஓடும் நீரில் கழுவுங்கள்

உங்கள் கைகளைக் கழுவிய பின் பழங்களையும் காய்கறிகளையும் ஓடும் நீரில் கழுவ வேண்டும். மேலும், உங்கள் கைகளைப் பயன்படுத்தி அவற்றைச் சரியாகத் தேய்க்கவும்.

fctmnm18 

3. சோப் பயன்படுத்தாதீர்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவ சோப் அல்லது லோஷன்களைப் பயன்படுத்தக் கூடாது.

4. வேர் காய்கறிகளை பிரஷ் செய்து கழுவ வேண்டும்

நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது கேரட் போன்ற வேர் காய்கறிகளைச் சுத்தம் செய்யும் போது, ​​ஒரு காய்கறி பிரஷ் அல்லது ஸ்பான்சு பயன்படுத்தப்பட வேண்டும். பெர்ரிகளைப் பொறுத்தவரை, அவற்றை ஒரு வடிகட்டியில் வைத்து, ஓடும் நீரின் கீழ் உள்ளவற்றைக் கழுவவும், நோய்க்கிருமிகளை அகற்றவும்.

2c29fj8o

5. கீரைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டியது அவசியம்

கீரைகளைக் குளிர்ந்த நீர் கொண்ட பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசுங்கள். கீரைகளை முன்னும் பின்னுமாக அலசி, கழுவுங்கள். பிறகு, குழாய் அடியில் கீரைகளை அலசுங்கள். இன்னொரு முறை வேண்டுமானாலும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சரியாகக் கழுவிய பின் அவற்றை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement