உங்களுக்கு தெரியாத ஆரஞ்சு விதையின் நன்மைகள்

ஆரஞ்சு விதைகளில் உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் உள்ளது என சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மைதான் விதைகளை நீங்கள் வீணாக்காமல் பயன்படுத்தலாம்.

Shubham Bhatnagar  |  Updated: June 07, 2018 12:07 IST

Reddit
5 Untold Benefits Of Orange Seeds
Highlights
  • ஆரஞ்சு பழம் அனைவருக்கும் பிடித்த ஒன்று
  • பழத்தை போலவே விதையிலும் ஆன்டி-ஆக்சிடன்ட் உண்டு
  • நம் உடலின் ஆற்றலை ஆரஞ்சு பழங்கள் அதிகரிக்கும்
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றே. ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு பழம் என்று நாம் இதை சுவைத்து உண்பதுண்டு. இன்னும் ஒரு படி மேலே போய் இப்பழத்தின் தோலை கூட அழகு சாதனமாக பய்னபடுத்தியது உண்டு. ஆனால் உள்ளிருக்கும் விதைகள் குப்பைக்கு தான் செல்கிறது, ஆனால் இதிலும் உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் உள்ளது என சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மைதான் விதைகளை நீங்கள் வீணாக்காமல் பயன்படுத்தலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் 

ஆரஞ்சு போலவே இவ்விவதைகளும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது, உங்கள் உடலின் முழு ஆரோக்கியத்தோடு புத்துணர்வாகவும் வைக்க உதவும். காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் உட்கொண்டால் உங்களது ஆற்றல் அதிகரிக்கும். இதனால் அடுத்த முறை ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்கும் பொழுது விதைகளை மறக்காதீர்கள் 
 
orange

சுவையூட்டும் சாராம்சம் 

ஆரஞ்சு விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கேக், தண்ணீர் மற்றும் உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதையும் தாண்டி நீங்கள் குளிக்கும் தண்ணீரிலும் இந்த விதையின் சாறை பயனப்டுத்தலாம். மேலும் நறுமண சாரமாகவும் வீட்டினுள் பயன்படுத்தலாம். 

 
orange cake


கூந்தல் பராமரிப்பு 

இவ்விதையின் எண்ணெய் இயற்கையான கண்டிஸனராக பயன்படும். தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியை ஆரோக்கியமானதாக ஆக்கும்.மேலும் இதில் இருக்கும் ஃபோலிக் அமிலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். 
hair care


Listen to the latest songs, only on JioSaavn.com

சுத்தம் செய்யும் 

ஆரஞ்சு விதையில் சுத்தம் செய்யும் தன்மை உள்ளது, இவ்விதையின் எண்ணெய் இயந்திரம் மற்றும் உலோகங்களின் கிரீஸ் மற்றும் எண்ணெய் பிசிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தும். மேலும் நல்ல நறுமணத்தை தரும்.​
cleaning


CommentsNow you know how versatile orange seeds are, so make sure to add them to your everyday meals.

About Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement