சர்க்கரை நோயை சமாளிக்க 5 காய்கறிகள் கொண்ட டயட்

Sushmita Sengupta  |  Updated: June 20, 2018 21:40 IST

Reddit
5 Vegetables You Must Include In Your Diabetes Diet
Highlights
  • Diabetes refers to a diseases that result in too much sugar in the blood
  • Diabetes is also linked with a variety of conditions
  • Lack of fibre and liquid calories make it worse to manage your sugarlevel
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும் போது, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை இரண்டு வகையாக பிரிக்கலாம். டைப்1 மற்றும் டைப்2 என இரு வகைப்படும். சரியான சிகிச்சை இல்லையெனில், நீரிழிவு நோய் மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது. உடல் பருமன், இருதய பிரச்சனைகள் என பிற உடல் பாதிப்புகளுக்கும் நீரிழிவு நோய் வழிவகுக்கும் அபாயம் உள்ளது. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றினால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்தனர்.
 
diabetes

சர்க்கரை நிறைந்த உணவு வகைகளையும், பானங்களையும் தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள குறைந்த நார்ச்சத்து, திரவ கலோரிகள் நீரிழிவு நோய் மோசமடைகிறது. உணவுகளில் உள்ள க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனப்படும் ஜிஐ அளவு 55ற்க்கும் குறைவாக இருந்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும், அல்லது 70க்கு மேற்பட்டு இருந்தால், இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், இந்த வகை நீரிழவு நோயை டைப்2 என அழைப்பர்.
 
vegetables and fruits

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவுகளில் எடுத்து கொள்ள வேண்டிய முக்கிய காய்கறி வகைகள்பாகற்காய்

கசப்பு சுவையை கொண்டதால், பெருபாலான வீடுகளில் பாகற்காய் சமைக்கப்படுவதில்லை. ஆனால், ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறியாகவும் உள்ளது. நீரிழிவு நோய் குணமடைய தேவையான சராண்டின் எனப்படும் அமிலம், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும்.
bitter gourd
 
கீரை வகைகள்

வைட்டமின் ஏ,பி, சி, டி, இ, கே ஆகிய சத்துகள் நிறைந்தது. டையட்டெரி ஃபைபர் சத்துகளும் கீரை வகைகளில் அதிகம் உள்ளன. இதனால், உடலில் உள்ள சர்க்கரைகளை எளிதில் உடைத்துவிடாமல். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். கீரை வகைகளை விருப்பதிற்கு ஏற்றவாறு சமைத்து உண்ணலாம்

spinach

காலிஃபிளவர்

காலி ப்ளவர் காய்கறிகளில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்து,பொட்டாசியம், மென்கனீஸ் ஆகிய சத்துகளும் உள்ளன. இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்ற இறக்கங்களை சரியான அளவில் வைத்து கொள்ள, தேவைப்படும் நார்ச்சத்துகள் காலி ப்ளவரில் அதிகம் உள்ளன.

cauliflower 625

பிரக்கோலி

Listen to the latest songs, only on JioSaavn.com

ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக பிரக்கோலி உள்ளது. நீரிழவு நோயால் இரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படுகிறது. பிரக்கோலியில் உள்ள சல்போராபேன்ஸ் இரத்ததில் உள்ள உயிரணுக்களை பாதுகாத்து கொள்கிறது. அதுமட்டுமின்றி, கல்லீரலில் உள்ள க்ளுகோஸ் அளவு அதிகமாவதையும் சல்போராபேன்ஸ் தடுக்கிறது.
 
broccoli

அஸ்பாரகஸ்

பொதுவாக சாலட்களில் பயன்படுத்தப்படும் அஸ்பாரகஸ், இத்தாலி நாட்டு உணவு முறைகளில் பயன்படுத்த கூடியது. உணவுகளுக்கு அதிக சுவை கூட்டுவது மட்டுமில்லாமல், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். க்ளுடாதியோன் என்ற ஆண்டி-ஆக்சிடண்ட் இருப்பதால், சர்க்கரை அளவை நிலையாக வைக்க உதவுகிறது.
 
asparagus


Comments 

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement