நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சியா விதைகளை பயன்படுத்தலாம்!!

நீரிழிவு நோயாளிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியின் போது இந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 27, 2019 12:51 IST

Reddit
Diabetes Diet: 5 Ways To Eat Chia Seeds For A Healthy Diabetes Management
Highlights
  • சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
  • முழுதானியங்களில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுதியாக உள்ளது.

சியா விதைகளில் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.  இவற்றில் குறிப்பாக நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.  இதில் இருக்கக்கூடிய பசை போன்ற தன்மையால் குடல் இயக்கங்கள் சீராக இருக்கும்.  மேலும் இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மூளை மற்றும் இருதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.  இது க்ளூட்டன் ஃப்ரீ விதை என்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருப்பதால் எலும்புகள் உறுதியாக இதனை சாப்பிடலாம்.  மக்னீஷியம் இருப்பதால் தசைகளை தளர்த்தி இறுக்கத்தை குறைக்கிறது.  நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகள் தான் சிறந்தது.  உடலுக்கு தேவையான நார்ச்சத்து இந்த சியா விதைகளில் இருப்பதால் இதனை சாப்பிட்டு நீரிழிவு நோயை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பது குறித்துதான் இந்த கட்டுரை.  

சாலட்: 
பச்சை காய்கறிகள், பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகளை கொண்டு ஆரோக்கியமான சாலட் தயாரித்து சாப்பிடலாம்.  அத்துடன் இந்த சியா விதைகளையும் சேர்த்து சாப்பிடவதால் உடலுக்கு நார்ச்சத்து அதிகமாக கிடைக்கிறது.  
 

oatmeal

 

Listen to the latest songs, only on JioSaavn.com

ஓட்மீல்: 
நீரிழிவு நோயாளிகளின் காலை உணவிற்கு ஏற்றது ஓட்ஸ்.  இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்திருக்கிறது.  இந்த ஓட்மீலும் பழங்கள் மற்றும் சியா விதைகளை தூவி சாப்பிடலாம்.  இவை ஒரு நாளுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.  


யோகர்ட்: 
யோகர்ட்டுடன் ஒரு கைப்பிடி அளவு சியா விதைகளை சேர்ப்பதால் அதன் ருசி இன்னும் அதிகரிக்கிறது.  அத்துடன் உங்களுக்கு விருப்பமான பழங்களை சேர்த்து கொள்வதால் புரதமும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.  சர்க்கரை நோயாளிகள் தினமும் இதனை சாப்பிட்டு வரலாம். 

 

Comments

chia seeds
 கடலைமாவு: 
கோதுமை அல்லது கடலை மாவுடன் சியா விதைகளை சேர்த்து பேன்கேக் தயாரித்து சாப்பிடலாம்.  நீங்கள் விரும்பினால் பராத்தா மாவுடனும் சேர்த்து கொள்ளலாம்.  ஆனால் இந்த பராத்தா தயாரிக்கும்போது எண்ணெயின் அளவை குறைத்து கொள்ளவும்.  

ஹோம்மேட் க்ராக்கர்ஸ்: 
நீரிழிவு நோயாளிகள் முழுதானியங்கள் சேர்க்கப்பட்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது.  முழுதானியங்கள் அல்லது கலவையான தானியங்கள் சேர்க்கப்பட்ட மாவுடன், சியா விதைகளை சேர்த்து பிஸ்கட் போல பேக் செய்து சாப்பிடலாம்.  நீரிழிவு நோயாளிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியின் போது இந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம். 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement