முழுதானியங்களை கொண்டு வெரைட்டியான ரொட்டி தயாரிக்கலாம்!!

இந்த ரெசிபிகள் எல்லாமே நெய், ஆலிவ் எண்ணெய் அல்லது தேன்காய் எண்ணெயில் செய்யலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 11, 2019 17:24 IST

Reddit
Diabetes Diet: 5 Whole Grain Desi Flat Bread Recipes For Diabetics
Highlights
  • நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
  • முழு தானியங்கள் உடலுக்கு உறுதியை கொடுக்கும்.
  • ராகி, கம்பு, கோதுமையில் தோசை செய்து சாப்பிடலாம்.

நம் உடல் என்பதே ஒரு அற்புத படைப்பு தான்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டை க்ளூக்கோஸாக மாற்றி செல்களுக்கு கொடுத்து உடலை ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது.  அதேபோல் இன்சுலின் என்னும் சுரப்பால் உடலில் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  இன்சுலின் சுரப்பில் ஏற்படும் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.  இந்த நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  நார்ச்சத்து நிறைந்த மற்றும் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளே ஆரோக்கியமானது.  சிறுதானியங்கள், முழு கோதுமை, சிவப்பு அரிசி, ஓட்ஸ் போன்றவற்றை நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிடுவது நல்லது.  மேலும் சில முழு தானியங்களை கொண்டு ஆரோக்கியமான ரெசிபிகளை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.  

கம்பு ரொட்டி:
இந்திய உணவுகளில் ரொட்டி என்பது பிரதானமானது.  கம்பு மற்றும் வெந்தயம் சேர்த்து செய்யப்படும் இந்த ரொட்டி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  
 

42iv5k1g ராகி ரொட்டி: 
ராகியில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து உள்ளது.  இதில் கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து ருசியான தோசை தயாரித்து சாப்பிடலாம்.  இதில் கலோரிகளும் மிக குறைவு. 


nrm7o4ug மரக்கோதுமை தோசை:
க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் இந்த மரக்கோதுமையும் உண்டு.  இதில் வைட்டமின், புரதம் மற்றும் மினரல் உள்ளது.  காலை மற்றும் மாலை நேர உணவாக இதனை சாப்பிடலாம்.  
ihqluc7g ராகி கோதுமை தோசை: 
பருப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்து தோசை சுட்டு சாப்பிடலாம்.  முழு கோதுமை மற்றும் ராகி சேர்க்கப்பட்ட இந்த தோசை இரத்தத்தில் சர்க்கரையை சீராக வைக்கிறது.  
m0vdulk8

 பன்னீர் தோசை: 
கடலைமாவு, பன்னீர் அல்லது காட்டேஜ் சீஸ் சேர்த்து தோசை தயார் செய்யலாம்.  இதில் புரதம் அதிகமாக இருக்கிறது.  காலை உணவாக இதனை சாப்பிட்டால் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடியும்.  


Comments

o7e6b3o8 இந்த ரெசிபிகள் எல்லாமே நெய், ஆலிவ் எண்ணெய் அல்லது தேன்காய் எண்ணெயில் செய்யலாம்.  இதே பொருட்களை வைத்து வெவ்வேறு இனிப்பு வகைகளையும் செய்து சாப்பிடலாம்.  இதில் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாக இருக்கிறதென்பதால் தினசரி கூட சாப்பிடலாம்.  


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement