மீதமிருந்த பாஸ்தாவை இந்த 5 வழியில் மீண்டும் சாப்பிடலாம்!

பாஸ்தாவை கொண்டு புதுமையான டிஷ்களை ட்ரை செய்யலாம்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 26, 2019 12:06 IST

Reddit
5 Yummy Ways To Use Leftover Pasta

நம்மில் பலர் இரவில் பாஸ்தாவை ஆர்டர் செய்து சாப்பிடுவோம். பாஸ்தா அளவுக்கு அதிகமாக ஆர்டர் செய்து, சாப்பிட முடியாமல் போனால், கீழேத் தூக்கி எறிய மனசு வராது. அதனாலேயே காலையில் அதை சூடாக்கி சாப்பிடுவோம். ஒரே மாதிரி சூடாக்கி சாப்பிடாமல் இந்த 5 வழியில் புதிய ஸ்டைலில் டேஸ்ட்டாக சாப்பிடுங்கள்.1. பாஸ்தா சீஸ் பால்ஸ் (Pasta Cheese Balls)

க்ரீஸி மற்றும் சீஸிபோல சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? நீங்களே இந்த பாஸ்தா சீஸ் பாலை உங்கள் கைகளால் செய்து அசத்துங்கள். ஒரு பவுலில் மீதமிருக்கும் பாஸ்தா, ஹெர்ப்ஸ், சீஸ், பிரட்தூள், உப்பு மற்றும் மிளகுப்பொடி தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். அவற்றை ஒன்றாகக் கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். டொமேட்டோ கெட்சப் அல்லது தனியாக சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க!

jdcbmpco

 

2. பாஸ்தா சாண்ட்விச் (Pasta Sandwich)

உங்கள் கிட்சனில் எப்பொழுதுமே பிரெட் இருக்கும்தானே? ஃப்ரெஷ் பிரெட் ஸ்லைஸ் 2 எடுங்கள். மீதமிருந்த பாஸ்தாவை சீஸ் மற்றும் ஹெர்ப்ஸ் கலந்து பிரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவே வைத்து சூடாக்கி சுவையான பாஸ்தாவை செய்து அசத்திடுங்கள்.

i0nihm1g

 

3. பாஸ்தா மஃபின்ஸ் (Pasta Muffins)

பேக்டு (Bake) உணவுகள் உங்களுக்குப் பிடிக்குமா? உடனே உங்கள் மஃபின் ட்ரேவை எடுத்து டேபிளில் வையுங்கள். உங்கள் கைகளால் சுவையான பாஸ்தா மஃபினை செய்து சாப்பிடுங்கள். எந்த டிசைன் பாஸ்தாவும் பயன்படுத்தலாம். ஸ்பெகட்டி, பென்னி, ஃபுஸிலி, மஃபின். ட்ரேவில் கொஞ்சம் ஆயில் தடவி, பாஸ்தாவை வைத்து கொஞ்சம் சீஸ் மற்றும் பார்ஸ்லே சேர்த்து வேக வைத்தால் பாஸ்தா மஃபின் தயார்.

9h7b1rn8

 

4. பாஸ்தா பீட்சா (Pasta Pizza)

பீட்சா பேஸில் மீதமிருந்த பாஸ்தாவை பரப்பிவிடுங்கள். அதில் டாப்பிங்ஸ்க்காக சீஸ் அல்லது உங்களுக்குப் பிடித்தமானவற்றை சேர்த்து வேக வையுங்கள். இந்த டேஸ்ட்டி சீஸ் பாஸ்தா பீட்சா உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து மகழ்ந்திடுங்கள்.

3v0ta4t8

 

5. பாஸ்தா சாலட் (Pasta Salad)

இந்த ரெசிப்பியில் என்ன பெஸ்டாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். மிக முக்கியமாக அடுப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஹெல்தியான காய்கறிகளை நறுக்கி இதனுடன் பாஸ்தாவை சேர்த்து சீஸ் கலந்தால் சுவையான ஹெல்தியான பாஸ்தா சாலட் ரெடி.

Listen to the latest songs, only on JioSaavn.com

9d368t58

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement