நைட் ஷிஃப்ட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு சில ஆயுர்வேத டிப்ஸ்

Shubham Bhatnagar  |  Updated: October 15, 2018 14:17 IST

Reddit
6 Ayurvedic Diet Tips And Healthy Eating Options For Night Shift Workers

இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு முற்றிலும் வாழ்க்கை முறை மாறி இருக்கும். பகலில் வேலை செய்யவும், இரவு ஓய்வெடுக்கவும் தான் நம் உடல் டிஸைன் செய்யப் பட்டிருக்கிறது. இரவு வேலை என்பது இயற்கைக்கு முரணானது. எடை அதிகரிப்பு, ஸ்ட்ரெஸ் போன்ற பல சவால்களை இரவு பணி வைத்திருக்கிறது. இரவில் கண் விழித்து பணிபுரிபவராக நீங்கள் இருந்தால், சரியான உறக்கம், உணவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். அப்படி என்னென்ன நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

1. டின்னர் - இரவு பணிகளில் இருப்பவர்கள், இரவு உணவுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள். 7.30 - 8.00 மணிக்குள் உங்களது உணவை முடித்து விடுங்கள். 4, 5 மணிக்கு தொடங்கி நடு இரவு 1, 2 வரை வேலை பார்ப்பவர்களாக இருந்தால், உங்களது மாலை நேர உணவை 8 மணிக்குள் முடித்துவிடுங்கள்

2. லைட் டின்னர் - சாப்பிட்டதும் சிலருக்கு தூக்கம் வரும். அவர்கள் லைட்டான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், சிவப்பரிசி, கிரில் சிக்கன் போன்ற அதிக புரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
 

ube9qed8

3. நெய் - இரவு விழிப்பு உடலை வறண்டு போகச் செய்யும் என்பதால், 1 ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. எண்ணெய் உணவுக்கு நோ - பொரித்த உணவுகள் ஜீரண மண்டலத்தில் பிரச்னையை உண்டாக்கும் என்பதால், கட்டாயம் தவிர்க்கவும்.

5. நட்ஸ் - ஸ்னாக்ஸ் நேரத்தில் பர்கர் மற்றும் சமோசாவுக்கு பதில் பாதாம், முந்திரி, சன்னா போன்றவற்றை நிறைய சாப்பிடவும்.

6. காபி - அதிகம் காபி குடிப்பதைத் தவிர்க்கவும். சோர்வாக இருந்தால் நிறைய தண்ணீர் குடிக்கவும். அதோடு ஃப்ரெஷ் ஜூஸ்களை அருந்தவும். இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

 
 

இரவு நேர பணியாளர்களுக்கு சில ஐடியாக்கள்
 

fruits and vegetables
 • ஃப்ரெஸ் பழம் மற்றும் காய்கறி ஜூஸ்
 • சீசனல் பழம் மற்றும் காய்கறிகள்
 • முழுதானிய பிரெட்
 • சீரியல்ஸ்
 • வறுத்த நட்ஸ்
 • காட்டேஜ் சீஸ்
 • குறைந்த கொழுப்புடைய பழ ஷேக்
 • அவித்த முட்டையுடன் கூடிய காய்கறி சாலட்
 • குறைந்த கொழுப்புடைய இறைச்சியில் செய்யப்பட்ட சாண்ட்விச்
 • முளைக்கட்டிய பயறு வகைகள்
 • தயிர்


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement