தொப்பையை குறைக்க ஆறு ஆயுர்வேத குறிப்புகள்

Weight Loss: ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைப்பது மிகவும் எளிமையானது

एनडीटीवी  |  Updated: November 12, 2018 23:24 IST

Reddit
Weight Loss: 6 Ayurvedic Diet Tips To Lose Weight And Cut Belly Fat

ஆயுர்வேத முறைப்படி நம் உடல் வாதம், பித்தம் மற்றும் கபம் என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இதனை தெரிந்து வைத்து கொண்டாலே போது, அதற்கு ஏற்ற உணவுகள் மற்றும் உடல் பயிற்சிகளை செய்து உடல் எடையை அதிகரிக்கவும் முடியும், குறைக்கவும் முடியும். மற்ற முறைகளை காட்டிலும் ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைப்பது மிகவும் எளிமையானது.

தினமும் உணவை மூன்று வேளையாக பிரித்து உண்ணவும்

உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்க வேண்டும் என்றால் செரிமானம் சிறப்பாக இருத்தல் வேண்டும். செரிமானம் சீராக இருந்தால் மட்டுமே உடலுக்கு தேவையான ஆரோக்கியம் சமமாக கிடைக்கும். உணவு வேளைக்கு இடையே சிற்றுண்டிகளை தவிர்க்குமாறு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

best time to eat meals

இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிடுங்கள்

எளிதில் செரிக்க கூடிய உணவுகளையே இரவு உணவாக எடுத்து கொள்ள வேண்டும். மேலும் இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட நீங்கள் தூங்க செல்லும்போது சாப்பிட்ட உணவு செரித்து இருக்கும். இதனால் இரவு நேரத்தில் உடலில் இருந்து இயற்கையாகவே நச்சு வெளியேற்றும் முறை சிறப்பாக இருக்கும். இரவு நேரத்தில் சூப் மற்றும் சாலட் சாப்பிட்டால் உடலுக்கு சிறந்த க்ளென்ஸாக இருக்கும்.

கபத்தை வெளியேற்றக்கூடிய உணவுகளை உண்ணவும்

உடலில் கபம் சேராமல் பார்த்து கொண்டாலே போது, ஆரோக்கியமாக இருக்கலாம். வெதுவெதுப்பான, உலர்ந்த, லேசான மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளே கபம் நீக்கும் தன்மை கொண்டவை. வீட்டிலே செய்யப்பட்ட உணவுகளை குளிர வைத்து சாப்பிடுவது சிறந்தது.

2vb49ub8

வாரம் மூன்று நாள் உடற்பயிற்சி செய்யவும்

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் கொழுப்பை குறைக்கவும் நிச்சயம் உடற்பயிற்சி அவசியம். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், யோகா அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சி ஏதேனும் ஒன்றை தினசரி வழக்கமாக்கி கொள்ள வேண்டும். குறிப்பாக அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் அந்த நாளுக்கான ஆற்றல் கிடைத்துவிடுகிறது.

வெந்நீர் அல்லது சூடான டீ அருந்துங்கள்

சூழல் மாசு, ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவற்றால் உடலில் கழிவுகள் மற்றும் நச்சுக்கள் தங்கிவிடுகின்றன. இவற்றை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை வெந்நீருக்கு உண்டு. காலை எழுந்ததும் சுடு தண்ணீரை குடித்துவரலாம். இத்துடன் இஞ்சி போன்ற மூலிகைகளை சேர்த்து பருகலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

ஆழ்ந்து உறங்க வேண்டும்

தூக்கம் சீராக இல்லாமல் தடைப்பட்ட தூக்கம் இருக்குமேயானால் கட்டாயமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் உடல் எடை கூடும் வாய்ப்பும் அதிகம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் தூங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement