கேரள உணவு சாப்பிடனுமா? அப்போ இந்த இடத்துக்கு போங்க!

நாட்டின் பல்வேறு இடங்களின் சுவையையும், சர்வதேச அளவிலான சுவைகளையும் கொண்ட உணவகங்கள் சென்னையில் அதிகம் உள்ளன

   |  Updated: September 25, 2018 10:01 IST

Reddit
6 Best Restaurants For Kerala Cuisine In Chennai

சென்னையில் பல வகை உணவகங்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு இடங்களின் சுவையையும், சர்வதேச அளவிலான சுவைகளையும் கொண்ட உணவகங்கள் சென்னையில் அதிகம் உள்ளன. லோக்கல் முதல் இண்டர்நேஷனல் வரை அனைத்தும் கிடைக்க கூடிய இடத்தில், பிரத்யேக கேரள உணவுகள் இருப்பது தெரியுமா? சென்னை முழுவதும், பிரபலமான சுவைமிக்க கேரள உணவுகங்கள் நிறைய உள்ளன. அதில், டாப் ஆர்டரில் இருக்கும் சில உணவகங்களின் பட்டியல் இங்கே!

1. கப்பா சக்க கந்தாரி (Kappa Chakka Kandhari)

மரவள்ளிக்கிழங்கு, பலாப்பழம், கந்தாரி மிளகாய் ஆகியவற்றின் பெயர்களே இந்த ரெஸ்டாரண்டிற்கு சூட்டப்பட்டுள்ளது. கோட்டயம் ஸ்டைல் பீப் ப்ரை, கருணை கிழங்கு, ஆகியவை இந்த ஹோட்டலின் ஸ்பெஷல் ஆகும். இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் உண்மையான கேரள சுவையை கொண்டுள்ளது.

Newsbeep

இடம்: ஹட்டோஸ் சாலை (Haddows Road)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @kaapiccino on

2. எண்டே கேரளம் (Ente Keralam)

2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரெஸ்டாரண்ட், சென்னையில் பிரபலமான ஒன்றாகும். இங்கு பரிமாறப்படும் ‘செட் மீல்ஸ்’, வாழைப்பூ கட்லெட், சிரியர் பீப் ப்ரை, திருவனந்தபுரம் ஸ்டைல் மீன் வறுவல் ஆகியவை கண்டிப்பாக ட்ரை செய்ய வேண்டிய உணவுகள்.

இடம்: கஸ்தூரி ரங்கன் சாலை (Kasturi Rangan Road)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ente Yathra (@enteyathrakal) on

3. கல்பக்கா (Kalpaka)

பட்ஜெட் ப்ரெண்ட்லி உணவுகளில் கல்பக்கா மிகவும் பிரபலமானது. மலபார் பரோட்டா, பீப் ப்ரை ஆகியவை சுவையானது ஆகும்.

இடம்: டிடிகே சாலை (TTK Road)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aniket (@aniketkathe) on

4. குமரக்கோம் (Kumarakom)

சென்னையில் பல இடங்களில் கிளைகள் வைத்திருக்கும் குமரக்கோம் உணவகம் டாப் கேரள உணவகங்களில் ஒன்றாகும். மீன் வகைகள் இங்கு சுவையானதாக இருக்கின்றன.

இடம்: கோடம்பாக்கம் (Kodambakkam), வேளச்சேரி (Velachery), பெருங்குடி (Perungudi), மற்றும் பல இடங்களில்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparna Mahesh (@tasty_slop01) on

5. நாயர் மெஸ் (Nair Mess)

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள நாயர் மெஸ், கேரளா மீல்ஸ், மீன் வகைகளுக்கு பிரபலமானது. பட்ஜெட் ப்ரெண்ட்லி உணவகங்களில் இதுவும் ஒன்று.

இடம்: முகமது அப்துல்லா 2வது தெரு, சேப்பாக்கம் (Mohamed Abdullah Second street, Chepauk)
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by D (@kutti.nambiar) on

6. இக்ககாஸ் (Ikkakas)

மலபார் ஸ்டைல் உணவுகளை சுவைக்க இக்ககாஸ் விசிட் செய்யவும். முக்கியமாக, மலபார் பிரியாணி கண்டிப்பாக சுவைக்க வேண்டியது.

Listen to the latest songs, only on JioSaavn.com

இடம்: செனோடாப் சாலை (Cenotaph Road)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roshan Kuruvilla Thomas (@roshankt) on

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement