வெப்பத்தால் எரிச்சலாக உள்ளதா?? இந்த குளிர்ச்சியான ரெசிபியை ட்ரை பண்ணுங்க!!

கால்சியம், இரும்புச்சத்து, மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்களும் எலுமிச்சையில் மிகுதியாக இருக்கிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 17, 2019 09:28 IST

Reddit
Summer Recipes: 6 Delightful Cooling Lemon Recipes To Try This Summer
Highlights
  • எலுமிச்சையில் புத்துணர்ச்சியளிக்க கூடிய தன்மை இருக்கிறது.
  • வைட்டமின், கால்சியம், பொட்டாசியம் எலுமிச்சையில் நிறைந்திருக்கிறது.
  • எலுமிச்சை கொண்டு டெசர்ட் செய்தால் ருசியாக இருக்கும்.

மிக எளிய முறையில் கோடை வெப்பத்தால் உண்டாகும் உடல் சூட்டை தணிக்க இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் எலுமிச்சை.  எலுமிச்சையில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  எல்லா உணவுகளிலும், இறைச்சிகளிலும் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது.  இது நல்ல ருசியை மட்டுமின்றி உணவிற்கு மணத்தையும் அதிகரிக்க செய்கிறது.  எலுமிச்சை கொண்டு ஊறுகாய், இனிப்பு பலகாரங்கள், தேநீர் என ஏராளமான ரெசிபிகளை தயாரிக்கலாம்.  மதுபானங்களில் கூட எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படுகிறது.  

நன்மைகள்: 
எலுமிச்சையில் ஃபைடோக்கெமிக்கல் என்னும் பொருள் இருக்கிறது.  கலோரிகள் மற்றும் இனிப்பு சுவை குறைந்தது.  உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் எலுமிச்சையில் அதிகம்.   அதுமட்டுமின்றி கால்சியம், இரும்புச்சத்து, மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்களும் மிகுதியாக இருக்கிறது.  இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இருதயத்தையும் பாதுகாக்கிறது.  இரத்த சோகை, சிறுநீரக கற்கள், செரிமான கோளாறு போன்றவற்றை தடுக்கிறது.  இதில் பெக்டின் என்னும் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது.  எலுமிச்சை கொண்டு சில குளிர்ச்சியான ரெசிபிகளை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.  

vneanaho 

மின்ட் கிவி லெமனேட்:
நீர்ச்சத்து நிறைந்த பழம் கிவி.  குளிர்ச்சி மிகுந்த இயற்கை மூலிகை புதினா.  இவை இரண்டுடன் எலுமிச்சையும் சேரும்போது கோடை வெப்பத்தால் உண்டாகும் எரிச்சல் மற்றும் சூடு தணியும்.

ஒயிட் சாக்லேட் மற்றும் லெமன் சர்பத்: 
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய ரெசிபி.  சார்பெட்டில் பழங்களில் ஆரோக்கியம் அனைத்தும் இருக்கும் என்பதால் உடனடியான குளிர்ச்சி தரும்.

லெமன் புட்டிங்: 
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை ஒருசேரும் போது வித்தியாசமான சுவை கிடைக்கும்.  பால், முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை தோல் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபி இரவு நேர உணவிற்கு பின் சாப்பிட அருமையாக இருக்கும்.

up8v87h8 

க்ளாசிக் லெமன் சர்பத்: 
எலுமிச்சை சர்பத்துடன் விப்டு க்ரீம் சேர்த்து டெசர்ட் செய்து சாப்பிடலாம்.  இவை உங்களை நாள் முழுக்க உடலில் நீர்ச்சத்துடனும் புத்துணர்வுடனும் வைத்திருக்கும்.

லெமன் சௌஃபில்: 
இந்த க்ளாசிக் ஃப்ரெஞ்ச் டெசர்ட் முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை பகுதியை கொண்டு தயாரிக்கப்படுகிறது.  ருசியான இந்த லெமன் சௌஃபில் ரெசிபி தயாரிக்க மிகவும் எளிமையானது.

ஜிஞ்சர் லிச்சி லெமனேட்: 
இஞ்சி மற்றும் லிச்சி பழம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த லெமனேட் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.  கோடை காலத்திற்கு ஏற்றது.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement