ஆலு பராத்தா தயாரிக்க 6 எளிய வழிகள்!!

உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம், மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவை சேர்த்து பராத்தாவில் எப்படி ஸ்டஃப் செய்வதென்பதை பார்ப்போம். 

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 17, 2019 16:56 IST

Reddit
Indian Cooking Hacks: 6 Easy And Delicious Ways To Make Aloo Paratha

வழக்கமாக நாம் செய்யும் சப்பாத்தியில் உருளைக்கிழங்கை ஸ்டஃப் செய்தால் ஆலூ பராத்தா தயார்.  இதனை ரெய்தா, ஊறுகாய், கிரேவி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.  தொடர்ச்சியாக நீங்கள் பராத்தா செய்து பழகியிருந்தால் அதனுள் அரிசி, பருப்பு, அல்வா, பனீர் போன்றவற்றை ஸ்டஃப் செய்வதெப்படி என்பதை அறிந்திருப்பீர்கள்.  காலை உணவாக பராத்தாவை மிக எளிதில் தயாரிக்கலாம்.  கோதுமை, ஓமம், எண்ணெய், உப்பு ஆகியவை சேர்த்து எப்படி பராத்தா செய்வதென்று பார்ப்போம்.  மேலும் உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம், மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவை சேர்த்து பராத்தாவில் எப்படி ஸ்டஃப் செய்வதென்பதையும் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

கோதுமை – 2 கப்

ஓமம் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உருளைக்கிழங்கு – 4

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2-3

உப்பு – தேவையான அளவு

மாங்காய் பவுடர் – 1 தேக்கரண்டி

சாட் மசாலா – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:

முழுகோதுமை மாவில் ஓமம் சேர்த்து கலந்து அதில் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.  பின் அதில் சிறிதளவு எண்ணெய் தடவி வைத்து சிறிது நேரம் ஊற வைக்கவும். 

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன், வெங்காயம், பச்சை மிளகாய், சாட் மசாலா, மிளகாய் தூள், மாங்காய் பவுடர், உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும். 

அடுப்பில் தவா வைத்து அதில் நெய் சேர்த்து தேய்த்து வைத்த பராத்தாவை சேர்த்து பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

 இதேபோல பராத்தாவை வெவ்வேறு முறையில் எப்படி தயாரிக்கலாம் என்பதை இந்த கானொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement