தேசிய ஊட்டச்சத்து வாரம்: தினசரி உணவில் சேர்க்க வேண்டிய புரத உணவுகள்!!

பருப்பு வகைகளில் பாசிப்பருப்பில் புரதம் அதிகமாக இருக்கிறது.  இதில் சூப் மற்றும் சாலட் செய்து சாப்பிடலாம்.  இதனை முளைக்கட்ட செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: September 06, 2019 11:55 IST

Reddit
National Nutrition Month: 6 High-Protein Foods You Must Add To Your Diet Today
Highlights
  • செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
  • ப்ரோக்கோலியில் வைட்டமின் கே, சி மற்றும் புரதம் இருக்கிறது.
  • பாசிப்பருப்பு சாலட் அல்லது சூப் சாப்பிட்டு வரலாம்.

தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது.  இந்த மாதம் முழுவதுமே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அதன் அத்தியவசியத்தையும் பற்றி மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  தசைகள் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் மிகவும் முக்கியமானது.  உடலில் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்துக்களுள் ஒன்று புரதம்.  உடல் எடை குறைக்கவும் புரதம் மிகவும் அவசியமானது.  அப்படி புரதம் நிறைந்த சில உணவுகள் சிலவற்றை தினசரி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.  

1. பால்: 

தினமும் ஒரு க்ளாஸ் பால் குடித்து வரலாம்.  இதில் வைட்டமின் பி, கால்சியம், மக்னீஷியம் மற்றும் புரதம் இருக்கிறது.  வெறுமனே பால் மட்டும் குடிக்க பிடிக்காதவர்கள் அதில் உங்களுக்கு பிடித்த பழங்களை சேர்த்து மில்க்‌ஷேக்காக குடிக்கலாம்.  3nk86n5g

 

2. முட்டை:

முட்டையில் உடலுக்கு தேவையான புரதம் நிறைந்திருக்கிறது.  இதில் ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை கறி, சாண்ட்விச் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.  தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வரலாம்.  s1ns170o3. மீன்:

மீனில் புரதம் அதிகமாக இருக்கிறது.  அதேபோல கோழியிலும் புரதச் சத்து நிறைந்திருக்கிறது.  உடல் எடை குறைக்க, மீன் மற்றும் சிக்கன் சாப்பிடலாம்.  இறைச்சியிலும் புரதம் இருக்கிறது ஆனால் அவற்றில் கொழுப்பு சத்தும் அதிகமாக இருக்கிறது.  

4. பாதாம்: 

தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டு வந்தால் மூளை வளர்ச்சி மற்றும் செயல்திறன் சீராக இருக்கும்.  தினமும் இரவு தூங்க போகும் முன் பாதாமை ஊற வைத்து, காலையில் அதன் தோல் நீக்கி சாப்பிட்டு வரலாம்.  5c0p6l285. ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.  இதில் வைட்டமின் கே, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது.  இதில் புரதமும் அதிகமாக இருக்கிறது.   

6. பாசிப்பருப்பு: 

பருப்பு வகைகளில் பாசிப்பருப்பில் புரதம் அதிகமாக இருக்கிறது.  இதில் சூப் மற்றும் சாலட் செய்து சாப்பிடலாம்.  இதனை முளைக்கட்ட செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  

Listen to the latest songs, only on JioSaavn.comufej4r18
 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement