Milk Myths - பால் பற்றி உளவும் 6 பொய்கள் என்னவென்று தெரிந்துகொள்வோமா..?

Milk Myths - பால் பற்றிய ஆறு பொய்கள் மற்றும் தவறான நம்பிக்கைகள் இதோ..,

एनडीटीवी फूड डेस्क  |  Updated: October 17, 2019 14:35 IST

Reddit
6 Myths About Milk That You Need to Stop Believing

Milk Myths - பால், கால்சியத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக உள்ளது. ஆனால், அது தான் மிகச் சிறந்தது என சொல்ல முடியாது.

Highlights
  • பாலை விட கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக சியா விதைகள் மற்றும் ராகி உள்ளது.
  • பால் கொதிக்கும்போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு பாதிக்காது.
  • முழு சீரான உணவாக (full balanced meal) பால் இருக்க முடியாது.

பால் என்பது குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவாகும். அது அவர்களின் அன்றாட உணவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகிறது. பால் ஒரு முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், சமச்சீர் உணவை உருவாக்கும் மூன்று அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பால் வழங்குகிறது. அதில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கால்சியம், வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும், பாலின் நுகர்வு மற்றும் சுகாதார நன்மைகள் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன. இங்கு, பால் பற்றிய ஆறு பொய்கள் மற்றும் தவறான நம்பிக்கைகள் சொல்லப்பட்டு வருகிறது.

1. பால் தான் கால்சியத்திற்கு (சுண்ணாம்புச் சத்து) சிறந்த மூலப்பொருள்!

பால், கால்சியத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக உள்ளது. ஆனால், அதுதான் மிகச் சிறந்தது என சொல்ல முடியாது. உதாரணமாக, 2 தேக்கரண்டி சியா விதைகளில் பாலில் இருப்பதை விட 6 மடங்கு கால்சியம் உள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின்படி, 100 மில்லி பாலில் 125 மி.கி கால்சியமும், அதுவே 100 கிராம் ராகியில் 344 மி.கி கால்சியம் உள்ளதாக தெரிகிறது. பொதுவாகவே 3 வயதிற்குப் பிறகு, நம் உடல் பால் புரதங்களை (கேசீன்) உடைக்கும் திறனை இழந்து, பாலில் இருக்கும் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அதற்கும் மேலாக, உணவுகளிலிருந்து கால்சியத்தை உறிஞ்சுவதற்கு நம் உடலில் வைட்டமின் டி போதுமான அளவு இருக்கவேண்டும்.

2. பாலை கொதிக்க வைத்தால் அதில் ஊட்டச்சத்துக்கள் குறையும்..!

பண்ணைகளிலிருந்து நேரடியாக வாங்கப்படும் போது, பாக்டீரியாவை அகற்ற பாலை கொதிக்கவைக்க வேண்டியது அவசியம். ஆனால், ஏற்கனவே பேஸ்சுரைஸ் (pasteurized) செய்யப்பட்ட பாக்கேட் பாலை கொதிக்கவைக்க வேண்டுமா, இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். நீங்கள் கொதிக்கவைத்தாலும், பால் கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக்களின் தரம் பாதிக்காது. டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி மங்லானி, "பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பதால் எந்தவிதமான தீங்கான விளைவுகளும் ஏற்படப்போவதில்லை. பால், அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழக்காது" என்று கூறுகிறார்.

3. காலையில் முதலில் பால்தான் குடிக்க வேண்டும்..! 

மனிதனுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நாளின் தொடக்கத்திலேயே கிடைக்கக்கூடும் என்பதால், காலை உணவுக்கு பால் சிறந்தது என்றாலும், வெறும் வயிற்றில் குடிப்பது உங்களுக்கு சிறந்த விஷயமாக இருக்காது. நீங்கள் செரிமானம் மற்றும் இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் அதைத் தவிர்க்க வேண்டும். "நீங்கள் எப்போதும் லேசான உணவுடனே நாளை தொடங்க வேண்டும். மோர் அல்லது மற்ற புளித்த பதிப்புகள் கொண்ட உணவுகளே ஜீரணிக்க மிகவும் எளிதானது" என்று மேக்ரோபயாடிக் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் சுகாதார பயிற்சியாளர் ஷில்பா அரோரா கூறுகிறார். ஆயுர்வேதத்தில் கூட உங்களுக்கு வாதம், கபம் போன்ற பிரச்சனை இருந்தால், வெறும் வயிற்றில் பால் குடிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் காலையில் முதலில் பாலை அருந்தக்கூடாது.

4. தினம் 2 கிளாஸ் பால் குடிக்க வேண்டும்..!!

பால் ஒரு சீரான உணவின் இன்றியமையாத பகுதியாக இருந்தாலும், அதனை சீஸ் (cheese), தயிர் போன்ற எந்த வடிவத்திலும் சேர்த்துக் கொள்ளலாம். அப்படியானால், ஊட்டச்சத்து தேவை அல்லாமல், பால் ஒரு விருப்ப உணவாக மாறும். அன்றாட கால்சியம் மற்றும் புரதத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம். மேலும், ஆரோக்கியமான எந்த மூலங்களிலிருந்தும் நீங்கள் தேர்வு செய்யலாம். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற பால் ஒரு வசதியான வழியாகும். ஆனால், அதற்காகப் பாலை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதில்லை.

5. பால் குடிப்பதால் வீக்கம் ஏற்படும்

பால் குடித்தால் வீக்கம் ஏற்படும் என்பது லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு உண்மையாக இருக்கலாம். பொதுவாக, பால் வீக்கத்தையோ வாயுவையோ ஏற்படுத்தாது. ஆனால், வேறு சில உணவுகளுடன் இணைந்தால் அப்படி ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒருபோதும் பழங்களுடன் சேர்த்து பால் சாப்பிடக்கூடாது, அது அஜீரணத்திற்கு வழிவகுக்கும் அமில கலவையாக அமைந்துவிடும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகிறார். "உடலில் பாலின் புரதத்தை சிறப்பாகப் பெறுவதற்கு நீங்கள் இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருள்களைச் சேர்க்கலாம்" என்றும் பால் குடித்த பிறகு ஆலர்ஜியை உணர்ந்தால், அதற்கு காரணம் குடலால் பாலை ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். அந்நிலையில், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்த தேயிலையை துளசியுடன் சேர்த்து, லேசாக காய்ச்சிக் குடிக்கலாம்.

6. பாலை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளலாம்...

பால், முழுமையான மற்றும் ஊட்டச்சத்து மிகுதியான உணவாகக் கருதப்பட்டாலும், நீங்கள் அதை வழக்கமான உணவுக்கு பதிலாக மாற்றக்கூடாது. பாலில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைத் தவிர, மனித உடலுக்கு இரும்பு மற்றும் வைட்டமின் சி போன்ற தாதுக்கள் தேவைப்படுகின்றன. மிக முக்கியமாக பால் நார்ச்சத்து இல்லாதவை. உங்கள் முழு உணவாக பாலைப் பயன்படுத்துவது, கலோரிகளின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும்.

பால் என்பது கிட்டத்தட்ட சரியான உணவாகும். நல்ல தரமான பால் கிடைக்கும் வரை, அதை தவிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அதே நேரத்தில், மற்ற உணவுகளும் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement