நேச்சுரல் ஃபேஸ் பேக்ஸ்!

குளிர்காலத்தில் பொதுவாக எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சனை சருமத்தில் வறட்சி, பொலிவிழந்து இருப்பது

   |  Updated: December 17, 2018 20:46 IST

Reddit
Winter Skin care: 6 Natural Face Packs From Your Kitchen Shelf For A Natural Glow

குளிர்காலத்தில் பொதுவாக எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சனை சருமத்தில் வறட்சி, பொலிவிழந்து இருப்பது. தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுபடுவோருக்கு இந்த பிரச்சனை வராது. இதனை தவிர்க்க பண விரையம் செய்து இரசாயணம் மிகுந்த க்ரீம்களை வாங்க வேண்டாம். உங்கள் சமையல் அறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது. முற்றிலும் இயற்கை வழியில் சருமத்தை பொலிவடைய செய்ய முடியும். எப்படி என்று பார்ப்போம்.

மில்க் க்ரீம் மற்றும் தேன்
பால் ஏடு மற்றும் தேன் இரண்டுமே சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை தேனிற்கு உண்டு. ஒரு பௌலில் ஒரு மேஜைக்கரண்டி பால் ஏடு மற்றும் தேன் எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை முகத்திற்கு தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். முகம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் காணப்படும்.
 

Newsbeep
honey hair mask
கோகோ பட்டர் மற்றும் ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் மற்றும் கோகோ பட்டர் சருமத்தை பட்டு போல் மென்மையாக செய்யும். இஞ்சி விழுதை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள அழுக்கு முற்றிலுமாக நீங்கி விடும். ஒரு பௌலில் ஒரு மேஜைக்கரண்டி கோகோ பட்டர், ஆலிவ் எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சி விழுதை எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும்.

 

olive oil
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழம் மற்றும் பால் சருமத்தை ஹைட்ரேட் செய்யும். முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகம் இருந்தால் பாலிற்கு பதில் நீங்கள் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். வாழைப்பழம் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை பிரகாசிக்க செய்யும். ஒரு பௌலில் வாழைப்பழத்தை எடுத்து மசித்து கொள்ளவும். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

banana 620x350
கற்றாலை மற்றும் பாதாம் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்
உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற கற்றாலை மற்றும் பாதாம் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். ஒரு பௌலில் 8-10 சொட்டு பாதாம் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், ஒரு தேக்கரண்டி கற்றாலை ஜெல் எடுத்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம். இதனால் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.

aloe vera has excelling soothing properties
பப்பாளி மற்றும் பால்
பப்பாளியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. இவை சருமத்தை மிருதுவாக செய்யும். பாலில் வைட்டமின் ஈ இருப்பதால் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். ஒரு பௌலில் அரை பப்பாளி பழத்தை எடுத்து அத்துடன் பால் சேர்த்து மசித்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
 

Listen to the latest songs, only on JioSaavn.com

papaya


 

கேரட் மற்றும் தேன்
கேரட்டில் இருக்கும் பீட்டா கெரட்டின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி பிரகாசிக்க செய்யும். கேரட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை முகத்திற்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

Comments

carrots


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement