கோடைக்கேற்ற ஹெல்தி சாலட்!!

 தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, நாவல் பழம், மாம்பழம், லிச்சி மற்றும் செர்ரி போன்றவை உடலுக்கு ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் வழங்கி பாதுகாக்கிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 18, 2019 11:30 IST

Reddit
Healthy Summer Diet: 6 Nutritious Summer Fruit Salad Recipes To Try
Highlights
  • சாலட்கள் எளிதில் செரிக்கக்கூடிய உணவு.
  • இதில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.
  • நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு சாலட் தயாரிக்கலாம்.

கோடைக் காலத்தில் நம்மால் நிறைய சாப்பிட முடியாது.  குறிப்பாக மசாலா சேர்க்கப்பட்ட உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகளை கோடைக்காலத்தில் சாப்பிடுவது கடினமாக இருக்கும்.  கோடை வெப்பத்தை சமாளிக்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு ஜூஸ் அல்லது சாலட் செய்து சாப்பிடுவதே சிறந்தது.  பழங்களை சாப்பிடுவதால் செரிமான மண்டலம், சருமம், கூந்தல் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும்.  தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, நாவல் பழம், மாம்பழம், லிச்சி மற்றும் செர்ரி போன்றவை உடலுக்கு ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் வழங்கி பாதுகாக்கிறது.   இவற்றை கொண்டு எப்படி சாலட் செய்வதென்று பார்ப்போம்.  

 நாவற்பழ சாலட்: 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் நாவல் பழமும் உண்டு.  நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது.  வெள்ளரி, மாம்பழம், நாவல் பழம், எலுமிச்சை சாறு சேர்த்து ஆலிவ் எண்ணெய் கொண்டு ட்ரெஸ்ஸிங் செய்து சாப்பிடலாம்.  

6r7r9j38

மாதுளை மற்றும் கிவி சாலட்: 
எல்லா பருவக்காலத்திற்கும் உகந்தது மாதுளை.  சிறுநீர் தாரை தொற்றை சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.  கிவியில் வைட்டமின் சி, ஈ, கே மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.  மாதுளை மற்றும் கிவி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட்டுடன் ஆரஞ்சு மற்றும் புதினா சேர்த்து கொண்டால் உடலுக்கு வைட்டமின் சி அதிகமாக கிடைக்கிறது.  அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.  

இறால் மற்றும் லிச்சி சாலட்: 
கடல் உணவு பிரியர்களுக்கு நிச்சயம் இந்த சாலட் பிடிக்கும்.  சற்றே வெதுவெதுப்பான மற்றும் மொருமொருப்பான இந்த சாலட்டில் மாம்பழ துண்டுகள், லிச்சி, மற்றும் இறால் சேர்த்து தயாரிக்கலாம்.  மதிய உணவாக இதனை சாப்பிட ஆரோக்கியமாக இருக்கலாம்.  

தர்பூசணி சாலட்: 
தர்பூசணி, பைன் நட்ஸ், புதினா  மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து இந்த சாலட்டை தயாரிக்கலாம்.  உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் கிடைக்கும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

f97asmmo 

மாம்பழ சாலட்: 
மாம்பழம், மொஸரெல்லா சீஸ், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, பால்சமிக் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தயாரிக்கலாம்.  இந்த கலர்ஃபுல் சாலட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  

முலாம்பழம் மற்றும் பப்பாளி சாலட்: 
கோடை வெப்பத்தை தணிக்க உதவும் இந்த சாலட்டில் முலாம்பழம், பப்பாளி, வெங்காயம், தக்காளி சேர்க்கலாம்.  கடுகு, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு ட்ரெஸ்ஸிங் செய்யலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement