புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைக்குமா?!

எனவே, எளிதாக செய்ய கூடிய புரதச்சத்து நிறைந்த காலை உணவுகளுக்கான டிப்ஸ் இங்கே பகிரப்பட்டுள்ளது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: August 29, 2018 17:39 IST

Reddit
Weight Loss: 6 Protein Rich Breakfast To Lose Weight And Reduce Belly Fat

ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற, காலை உணவை சாப்பிட மறக்க கூடாது. குறிப்பாக, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்வதை விடவும், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியம். உடலுக்கு தேவையான புரதச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, எளிதாக செய்ய கூடிய புரதச்சத்து நிறைந்த காலை உணவுகளுக்கான டிப்ஸ் இங்கே பகிரப்பட்டுள்ளது

புரதச்சத்து உடல் எடையை குறைக்குமா?

  1. புரதச்சத்து, உடல் தசைகளை கட்டுக்குள் வைக்கின்றன. அதனால், உடல் எடை குறைகிறது
  2. உடலில் உள்ள புரதச்சத்து, குறைந்த கலோரி அளவு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள உதவுகின்றன
  3. மேலும், கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து புரதச்சத்து எடுத்துக் கொள்வதினால், உடல் ஹார்மோன்கள் சீராக செயல்படும்
  4. புரதச்சத்தினால், உடற்பசி கட்டுக்குள் இருக்கும். எனவே, உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறைவு
     
3f55eha
புரதச்சத்து நிறைந்த காலை உணவுகள்

1 . ஓட்ஸ்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஓட்ஸ் உணவுகள், உடற்பசியை சிறிது நேரத்திற்கு கட்டுக்குள் வைக்கிறது. மேலும், உடற் பயிற்சி செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ஓட்ஸ் எடுத்துக் கொண்டால், கலோரிகள் எளிதாக கரைகின்றன. எனவே, காலை உணவுக்கு ஓட்ஸ் சாப்பிடலாம்

2 . முட்டை

முட்டையின் வெள்ளை, மஞ்சள் கருவில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. மேலும், எளிதாகவும், வித்தியாசமாகவும் செய்ய கூடிய முட்டை ரெசிப்பிகள் நிறைய உள்ளன. எனவே, காலை உணவுக்கு முட்டை சாப்பிடலாம்.

3 . பாசி பருப்பு

கலோரி அளவு குறைவாக உள்ள பாசி பருப்பு, உடல் எடை குறைக்க உதவுகிறது. எனவே பாசி பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4 . அவல்

புரதச்சத்து நிறைந்த அவல், குறைந்த கலோரிகளே கொண்டுள்ளது. மேலும், உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆகியவை உள்ளதால், மிகவும் ஆரோக்கியமானது

5 . கோதுமை ரவை

உடல் ஹார்மோன் அளவுகள் சீராக இருக்க, கோதுமை ரவை பயன்படுகின்றது. மேலும், புரதச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியமானது

6 . பயிறுகள்

பயிறு வகைகளில் அதிக அளவிலான புரதச்சத்து உள்ளது. தினம் ஒரு பயிறு வகை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement