காலை உணவை எளிதாக்கிடுங்கள்!!!

மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த காலை உணவுகளை என்ன என்பது குறித்து பார்ப்போம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 03, 2019 12:48 IST

Reddit
6 Scrumptious Breakfast Ideas for Busy Mornings
Highlights
  • காலை உணவுதான் உங்கள் உடலுக்கு முழு ஆற்றலை கொடுக்கும்.
  • காலை உணவு உங்கள் மெட்டபாலிசத்தை சீராக வைத்திருக்கும்.
  • ஓட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகளை காலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

காலை உணவு உங்கள் ஆற்றலை அதிகரித்து, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.  கார்போஹைட்ரேட் உங்கள் மூளை செயல்பாட்டிற்கு உகந்தது.  காலை உணவு உங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமானத்தை சீராக வைக்கிறது.  தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் காலை உணவை ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடுவதெல்லாம் சாத்தியமில்லை.  அதனால் மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த காலை உணவுகளை என்ன என்பது குறித்து பார்ப்போம்.  பேன்கேக்ஸ்:

தினைமாவை கொண்டு பேன்கேக் தயாரிக்கலாம்.  இதில் ஃபோலேட், புரதம், நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.  இந்த பேன்கேக்குடன் பெர்ரீஸ், மேப்பிள் சிரப் ஆகியவை சேர்த்து காலை உணவை சிறப்பானதாக்கலாம்.  pancakes

 

ஃப்ரென்ச் டோஸ்ட் அண்ட் மஸ்க் மெலான் சாலட்:

முட்டை சேர்க்கப்பட்ட இந்த ஃப்ரென்ச் டோஸ்ட்டுடன் முலாம் பழம், தேன், புதினா ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.  french toast

 

மக் ஆம்லெட்:

காலை நேர அவசரத்திற்கு முட்டையில் உங்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து ஆம்லெட் தயாரிக்கலாம்.  இந்த ஆம்லெட் புரதம் நிறைந்ததாக இருக்கும்.  தினமும் முட்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  


omelette

 

முஸ்லி வித் மஃபின்ஸ்:

ஓட்ஸுடன் பழங்கள், பால், தேன் மற்றும் க்ரீம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மஃபின் நார்ச்சத்து நிறைந்தது.  அத்துடன் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவானது.  இது உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சரிசெய்து, ஆற்றலை தருகிறது.  

muesli

 

செரல்ஸ்:

தானியங்கள் மற்றும் பழங்கள் சேர்த்து தினமும் காலை உணவாக சாப்பிடலாம்.  இதில் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளது.  ருசியான இந்த ப்ரேக் ஃபாஸ்ட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.  

cereal

 

ஓட்மீல்: 

தானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஓட்மீல் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது.  நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடலுக்கு தேவையான சர்க்கரையை சீராக கொடுக்கிறது.  எல்லோரும் சாப்பிட உகந்த உணவு.  oats

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement