உங்கள் ப்ரோட்டின் பௌலில் சேர்க்க வேண்டிய 6 உணவுகள்!!

 நம் உடலில் ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்துவம் உண்டு.  ஒன்று சரியாக இயங்காவிட்டாலும் மற்ற உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 27, 2019 12:29 IST

Reddit
High Protein Diet: 6 Things To Add to Your Own Vegetarian Protein Bowl 

ஆரோக்கிய உணவுகளை நோக்கி நாம் படையெடுக்க ஆரம்பித்துவிட்டோம்.   தற்போது நம் வாழ்வியல் முறை மாற்றத்தால் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய்கள், உடல் பருமன், வைட்டமின் பற்றாக்குறை போன்ற உடல் உபாதைகளை சரிசெய்வதற்கு நாம் நிச்சயம் நம்முடைய அன்றாட உணவுகளை ஆரோக்கியமானதாக மாற்ற கடமை பட்டுள்ளோம்.  நம் உடலில் ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்துவம் உண்டு.  ஒன்று சரியாக இயங்காவிட்டாலும் மற்ற உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும்.  ஆகையால் உடலின் மீது அக்கறை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களுள் புரதமும் ஒன்று.  அப்படிப்பட்ட புரதத்தை தினசரி நாம் தேவையான அளவு எடுத்து கொள்கிறோமா என்பது கேள்விக்குறிதான்.  சரி, இன்றிலிருந்து இந்த புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள ஆரம்பியுங்கள். 

கொண்டைக்கடலை கறி: 
கொண்டைக்கடலையில் உடலுக்கு தேவையான புரதம் நிறைந்துள்ளது.  இறைச்சி தவிர்த்து சைவ உணவுகளில் புரதம் நிறைந்த உணவு கொண்டைக்கடலை.  இதனை தினசரி வேக வைத்தோ அல்லது முளைக்கட்ட வைத்தோ சாப்பிடலாம். 
 

Comments

chole bhature
 
சிவப்பு அரிசி: 
சிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.  இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது.  பசி உணர்வில்லாமல் நீண்ட நேரம் நிறைவாக உணர முடியும்.  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  
3ffj4j1o
 காராமணி : 
சிவப்பு காராமணியில் புரதம் நிறைந்திருக்கிறது.  இதனை வேகவைத்து மசித்து அத்துடன் சோள மாவு, மசாலா பொருட்கள் போன்றவற்றை சேர்த்து பேக் செய்து கட்லெட் போன்று சாப்பிடலாம். 
falafel 625
 டோஃபு டிக்காஸ்: 
பொரித்த உணவுகளை காட்டிலும் டிக்காஸ் கலோரிகள் குறைவானது.  பன்னீர் டிக்காஸ் செய்வது போன்றே இந்த டோஃபு டிக்காவும் செய்யலாம்.  வீகன் உணவுகளில் டோஃபு முக்கியமானது.  அடிக்கடி டோஃபு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.  
tofu tikka
 பீட்ரூட் மற்றும் கேரட்: 
பீட்ரூட் மற்றும் கேரட்டை ஊறுகாய் போன்று செய்து சாப்பிடலாம்.  பீட்ரூட் மற்றும் கேரட்டை மெல்லிசாக நறுக்கி அதனை வினிகர் மற்றும் உப்பு கலந்த தனித்தனி ஜாரில் போட்டு ஊற வைக்கவும்.  சில நாட்கள் கழித்து அதனை ஊறுகாய் போல செய்து சாப்பிடலாம்.  ஆரோக்கியத்துடன் ருசியும் கலந்து உணவு இது.  
beetroot
 புதினா யோகர்ட் சட்னி: 
புதினா குளிர்ச்சி தன்மை மிக்கது.  கோடைக்காலத்தில் புதினாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் உடல் சூடு தணியும்.  புதினா, பூண்டு, கொத்தமல்லி, எலுமிச்சை, இஞ்சி, உப்பு மற்றும் தயிர் சேர்த்து சட்னி செய்யலாம்.  இதில் புரதம் அதிகம் என்பதால் பராத்தா மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.  
46g61ii8
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement